ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

நெஞ்சம் நிறை நன்றியுடன்

தமிழ் மணத்தில் நட்சத்திரப் பதிவராக ஒரு வாய்ப்பு- ஒரு வாரகாலம் தொடர்ந்து இடுகைகள் என்று கேட்டதுமே ஒரு பதட்டம்.. இருந்தும் நல்ல வாய்ப்பு என்று நண்பர்கள் சொல்லவே ஒரு ஆர்வம்..

என் நம்பிக்கை(இறை நம்பிக்கை),ஆர்வம்( தனித்தமிழ்), தோல்வியால் ஏற்பட்ட கோபம்(முள்ளிவாய்க்கால்),வெறுப்பு(கிரிக்கெட்),ஆச்சர்யம்(அய்யா தொ.ப அறிமுகம்),அனுபவம்(தொழிற்கல்வி),பொறுப்புணர்வு(ஊடகங்களில் குடும்ப ஆதிக்கம்) போன்ற என் சம்பந்தப்பட்டவைகளையே பேசும் பொருளாக்கி ஏழு நாட்கள் உங்களுடன்..

என் கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்தோர் அதிகமாக இருந்தாலும் கிரிக்கெட், முள்ளிவாய்க்கால் அவலம் போன்ற இரண்டிற்கு எதிர்ப்புகளும் அதிகம். கிரிக்கெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தோர் ஒரு வழிபாட்டு மனப்பான்மையுடன் தெரிவித்தமையால், அதை நான் கடந்து சென்றுவிட்டேன்.

ஆனால் முள்ளிவாய்க்கால் அவலம்- கட்டுரைக்கு வந்த எதிர்வினைகள் என்னைச் சிந்திக்க தூண்டியவை..அவைகளை எதிர்வினைகள் என்ற பெயரில் பதிவிடலாம் என்று இருக்கிறேன். அது நான் எழுதியதின் மறுபக்கம் என்பதையும் அதையும் தங்கள் முன் வைக்க வேண்டும் என்றும் நினைக்கிறேன்.

இந்த அரிய வாய்ப்பை எனக்கு தந்த தமிழ்மணம் நிர்வாகிகளுக்கும், வாசித்தவர்களுக்கும். வாசித்து கருத்துகளை பகிர்ந்து கொண்டவர்களுக்கும்.தனி மின்னஞ்சலில் என்னைத் தொடர்பு கொண்டவர்களுக்கும், மற்றும் இனிமேல் வாசிக்க இருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்

இது எனக்கு புதிய நண்பர்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அதற்காகவும் நன்றிகள்.

அன்புடனும் நன்றியுடனும்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

17 கருத்துகள்:

Ravichandran Somu சொன்னது…

//என் நம்பிக்கை(இறை நம்பிக்கை),ஆர்வம்( தனித்தமிழ்), தோல்வியால் ஏற்பட்ட கோபம்(முள்ளிவாய்க்கால்),வெறுப்பு(கிரிக்கெட்),ஆச்சர்யம்(அய்யா தொ.ப அறிமுகம்),அனுபவம்(தொழிற்கல்வி),பொறுப்புணர்வு(ஊடகங்களில் குடும்ப ஆதிக்கம்) போன்ற என் சம்பந்தப்பட்டவைகளையே பேசும் பொருளாக்கி ஏழு நாட்கள் உங்களுடன்..//

தங்களுடைய எண்ணங்களையும், கருத்துகளையும் மிகத் தெளிவாக பகிர்ந்து கொண்டீர்கள்.

சிறப்பான நட்சத்திர வாரம். வாழ்த்துகள்!

நன்றி!

சிநேகிதன் அக்பர் சொன்னது…

சிறப்பான நட்சத்திர வாரமாக அமைந்ததற்கு வாழ்த்துகள்.

நல்ல கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் சார்.

இரா. செல்வராசு (R.Selvaraj) சொன்னது…

அன்புள்ள வெற்றிவேல், தமிழ்மண நட்சத்திர வாரத்தின் வழியாகவே உங்கள் எழுத்துக்களை அறிய நேர்ந்தது. உங்கள் அனுபவம், சிந்தனைகள், வளர்சூழல் இவற்றின் தாக்கத்தின் அடிப்படையில் சிறப்பான முறையில் பதிவு செய்திருக்கிறீர்கள். பலவற்றுடன் உடன்பட முடிந்தது. சில புதிய கோணங்களையும் அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள். தொடர்ந்து ஊக்கமாக எழுதிவாருங்கள்.

சுப தமிழினியன் சொன்னது…

//
என் நம்பிக்கை(இறை நம்பிக்கை),ஆர்வம்( தனித்தமிழ்), தோல்வியால் ஏற்பட்ட கோபம்(முள்ளிவாய்க்கால்),வெறுப்பு(கிரிக்கெட்),ஆச்சர்யம்(அய்யா தொ.ப அறிமுகம்),அனுபவம்(தொழிற்கல்வி),பொறுப்புணர்வு(ஊடகங்களில் குடும்ப ஆதிக்கம்) போன்ற என் சம்பந்தப்பட்டவைகளையே பேசும் பொருளாக்கி ஏழு நாட்கள் உங்களுடன்..//

பேசப்பட்ட கருத்துக்களை சுருக்கமாக தொகுத்திருக்கிறீர்கல் நன்றி.

நட்சத்திர வாரத்தில் உங்களிடமிருந்து ரவிச்சந்திரன் எதிர்பார்த்ததைப் போல பெரியார் கட்டுரை இடம் பெறாமல் போனதற்கு நான் காரணமாகியதற்கு மண்ணிக்கவும்

Unknown சொன்னது…

///ஆனால் முள்ளிவாய்க்கால் அவலம்- கட்டுரைக்கு வந்த எதிர்வினைகள் என்னைச் சிந்திக்க தூண்டியவை..அவைகளை எதிர்வினைகள் என்ற பெயரில் பதிவிடலாம் என்று இருக்கிறேன். அது நான் எழுதியதின் மறுபக்கம் என்பதையும் அதையும் தங்கள் முன் வைக்க வேண்டும் என்றும் நினைக்கிறேன்.///
ஒரு நல்ல முன்னோட்டம், செயல்படுத்துங்கள்.ஆரோக்கியமான விவாதங்களை தொடரலாம்.மிகச்சிறப்பான நட்சத்திர வாரமாக அமைத்ததற்கு வாழ்த்துக்கள்.

அ.வெற்றிவேல் சொன்னது…

ரவிச்சந்திரன்..///தங்களுடைய எண்ணங்களையும், கருத்துகளையும் மிகத் தெளிவாக பகிர்ந்து கொண்டீர்கள்//// தங்கள் பின்னூட்டம் எனக்கு உண்மையில்யே மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது..தாங்கள் தொடர்ந்து எல்லா இடுகையும் படித்ததும்,அதற்கு பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்தியதும் கட்டுரைகள் நன்றாக அமைந்ததற்கு காரணம்..நன்றி ரவி!!

அ.வெற்றிவேல் சொன்னது…

@சிநேகிதன் அக்பர்: நன்றி!!

அ.வெற்றிவேல் சொன்னது…

@இரா.செல்வராசு.,தமிழ்மணம் கொடுத்த வாய்ப்பை நல்லமுறையில் பயன்படுத்தி இருப்பதாக நினைக்கிறேன்.உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. நானே எழுதி நானே படிப்பதால் தான் அதிகமாக எழுதவில்லை.இந்தத் தளம் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தந்ததால் தான் தொடர்ந்து எழுதினேன். இல்லை என்றால் 1 வாரத்தில் 7 கட்டுரை எழுதி இருக்க மாட்டேன்

அ.வெற்றிவேல் சொன்னது…

சுப.தமிழினியன்..பெரியார் கட்டுரை நண்பர் ரவிச்சந்திரனே நன்கு எழுதி இருந்தார்.அதனால் தான் உடனடியாக் நானும் போடவில்லை.அதற்குப் பதிலாகத் தான் பெரியார் வாரத்தை இறை நம்பிக்கை கட்டுரை மூலம் ஆரம்பித்தேன்
நன்றி சுப.தமிழினியன் தங்கள் கருத்துக்கும் ஆதரவிற்கும்

அ.வெற்றிவேல் சொன்னது…

@நந்தா ஆண்டாள்மகன்..நன்றி தங்கள் வருகைக்கும் வாழ்த்தியத்ற்கும்..ஆம். இரண்டு வேறுபட்ட பார்வைகள் இருக்கும் போது அதை தெரியப்படுத்த வேண்டியது என் கடமை என நினைக்கிறேன். உண்மையை படிப்பவர்கள் பிரித்துப் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு

தருமி சொன்னது…

நல்ல ஒரு வாரத்தை அளித்தமைக்கு நன்றியும் பாராட்டுகளும்

'பரிவை' சே.குமார் சொன்னது…

தங்களுடைய எண்ணங்களையும், கருத்துகளையும் மிகத் தெளிவாக பகிர்ந்து கொண்டீர்கள்.

சிறப்பான நட்சத்திர வாரம். வாழ்த்துகள்!

அ.வெற்றிவேல் சொன்னது…

நன்றி தருமி அய்யா..தங்கள் வருகைக்கும் வாழ்த்தியத்ற்கும்..தாங்கள் நல்ல வாரம் என்று சொன்னவுடன் ஒரு திருப்தி வருகிறது..நன்றி

அ.வெற்றிவேல் சொன்னது…

நன்றி சே.குமார்..தொடர்ந்து வந்தமைக்கும் வாழ்த்தியத்ற்கும்..

அ.வெற்றிவேல் சொன்னது…

நன்றி சே.குமார்.. தொடர்ந்து வநத்மைக்கும் வாழ்த்தியதற்கும்

Thenammai Lakshmanan சொன்னது…

ஒரு வாரம் சிறப்பாக அசத்திட்டீங்க ..வெற்றி பாராட்டுக்கள்..

Bibiliobibuli சொன்னது…

உண்மைதான். இன்று ஈழம் பற்றி நிறைய கருத்துருவாக்கங்கள், குழப்பங்கள் நிலவுகின்றன. உங்கள் பதிவின் மூலம் எனக்கு புலப்படாத கோணம் ஏதாவது புலப்படலாம். ஏதோ ஒரு விதத்தில் தெளிவு பிறக்கலாம்!!! உங்கள் முள்ளிவாய்க்கால் அவலம் எதிர்வினை பதிவுக்காய் காத்திருக்கிறேன்.

கருத்துரையிடுக