வருடம் ஒன்று ஓடோடிப் போனது..
25 வருடங்களாக கட்டிக்காத்து வந்த அனல் அனைந்து போன தினம்..
எனக்காக, என் மொழிக்காக, என் தமிழ் இனம் சுயமரியாதையுடன் வாழ, தனக்கென ஒரு நாடு உருவாகிவிடும்..நான் கண் மூடுவதற்குள் என்ற கனவு..கனவாய்ப்போன நாள்..
மே 17- நினைக்கும் போதெல்லாம் ரத்தம் கசியுது..
ஆதரவற்ற இனமா., தமிழ் இனம்..
என்ன சொல்லி என்னைத் தேற்ற..என்று எனக்குத் தெரியவில்லை..
ஆயிரக்கணக்கில் உயிரிழந்த என் இளம் தம்பிகளின் தியாகம் வீணா?
இந்த நாளில் உயிரிழந்த என் தமிழ்ச் சகோதர சகோதரிகளே..
இந்தக் கோழையை மன்னிக்கவும்..
இப்படிக்கு ..
புலம்ப மட்டுமே தெரிந்த ஒரு கோழை
அ.வெற்றிவேல்
17/05/2010
தொடர்புக்கு : vetrivel@nsc-ks.com