திங்கள், 13 செப்டம்பர், 2010

இறை நம்பிக்கை

கடவுள் என்னும் கோட்பாடு எனக்கு ஏற்புடைத்ததல்ல; அது அறிவுக்குப் புறம்பானது—ஐன்ஸ்டீன்

நான் மிகவும் விரும்பிப் படிக்கும் வலைத்தளங்களில் அய்யா தருமி, வால்பையைன், All inAll அழகுராஜா,ருத்ரன் போன்றவர்களின் தளங்கள். எனது விருப்பத்திற்கு முதல் காரணம் இவர்கள் அனைவருமே இறை நம்பிக்கையை கேள்விக்குட்படுத்துவது தான்..

சிவகங்கை ஒத்த அக்ரஹாரத்தில் வளர்ந்தவன் நான்.. சிறு வயதில் கோவில் கோவிலாக திரிந்தவன்.மார்கழி மாதங்களில் 4 மணிக்கு எழுந்து எல்லாக் கோவில்களுக்கும் சென்று வந்தவன்.. கல்லூரிப் பருவத்தில் எனக்குள் ஏற்பட்ட கருத்து மாற்றங்கள், பெரியாரிஸம், கம்யூனிஸம் போன்ற சித்தாந்தங்கள் என்னை கவரவே, எப்பொழுது கடவுள் என் மனதில் இருந்து வெளியேறினார் என்று தெரியவில்லை.பகலவனைக் கண்ட பனி விலகுவது போல அதிகம் படிக்கப் படிக்க கடவுள் எப்பொழுது என் மனதில் இருந்து விலகினார் என்று சொல்லத் தோன்றவில்லை.கல்லூரிக்கு நுழைந்த காலத்தில் நான் படித்த ராகுல சாங்கிருத்தாயனின் “வால்கா முதல் கங்கை வரை” , என் சிந்தனைகளைத் திருப்பிப் போட்ட புத்தகம்.


கடவுள் இருக்கிறார் என்று எடுத்துக் கொண்டாலும், கடவுள் இயற்கைக்கு முன்னர் தோற்று, இருந்த இடம் தெரியாமல் போன சந்தர்ப்பங்களை இந்த 50 வருட வாழ்க்கையில் பலமுறை நான் சந்திக்க நேர்ந்தது.. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே மிகப் பெரும் தோல்வியைச் சந்தித்து எங்கு இருக்கிறார் என்று விளம்பரப்படுத்தும் நிலையில் நாம் வணங்கும் அனைத்து கடவுள்களும் தோற்றுபோன சம்பவம் சுனாமி ஆகும்..இது கடவுள் இயற்கையிடம் தோற்றுப்போன சம்பவம்.. இரண்டாவது முள்ளிவாய்க்கால் அவலம்..இது அரசு அதிகாரத்தின் முன்னர் கடவுள் தோற்கடிக்கப்பட்ட சம்பவம்.. ஒட்டுமொத்தமாக ஒரு இனமே கடவுளுக்குப் பிடிக்காமல் போகுமா என்ன? அப்படி ஒரு இனமே பிடிக்காமல் போன கடவுள் இருந்தால் என்ன? இல்லாமல் போனால் என்ன? அறிவுள்ள மக்களால் கடவுள் தோற்கடிக்கப்பட்ட சம்பவங்கள் இங்கு ஆயிரக்கணக்கில் உண்டு.அறிவியல் கண்டுபிடிப்புகளை மட்டும் சொல்லவில்லை. தான் தான் கடவுள் என்ற பிம்பத்தை கட்டமைத்துள்ள பங்காரு அடிகளார் முதல் நித்தியானந்தா வரை, கடவுளை தோற்கடித்தவர்கள் தான்.


கடவுளே கேள்விக்கும் கேலிக்கும் ஆளான சந்தர்ப்பங்களே அளவிட முடியாமல் இங்கு இருக்கும் போது,கடவுள்களைத் தூக்கி நிறுத்தப் புறப்பட்ட மதங்கள் நிலை இன்னும் கேலிக்குரியதாகி இருக்கிறது..


மனிதனின் இன்றைய வாழ்வே கேள்விகளால் ஆனது.ஆனால் மத நம்பிக்கைகளை மட்டும் கேள்விகள் கேட்கக்கூடாது என்பதே ஒரு பெரிய பித்தலாட்டம்..

அதிலும் எந்த கேள்வியைக் கேட்டாலும் என் முன்னோர்கள் சொன்னார்கள். என் வேதப் புத்தகத்தில் இருக்கிறது..கடவுள் அருளிச் செயத எங்கள் புத்த்கத்தில் இருக்கிறது என்றெல்லாம் சொல்லிக்கொண்டு கேள்வி கேட்காமல் இருப்பதை விட மடத்தனம் எதுவும் இல்லை.கடவுளால் சொல்லப்பட்ட புத்தகம், கடவுள் மறந்து போனதைச் சொல்ல அப்புத்தகத்திற்கு உபநூல் என்று ஏகப்பட்ட தொகுப்புகள். முன்னோர்கள் சொன்னதோ, புத்தகங்கள் சொல்வதோ , உன் அறிவுக்கு அது சரியாகப் படுகிறதா என யோசிக்காதவன் மனிதனாக இருக்கவே தகுதி இல்லாதவன்.


தந்தை பெரியார் என்ன சொல்கிறார் எனப் பார்ப்போம். ””மதம் எப்படி ஏற்பட்டது? மனிதன் காட்டுமிராண்டியாக இருந்த காலத்தில் , அவரவர் புத்திக்கு தகுந்த படி ”மக்கள் நன்மைக்கு” என்ற கருத்திலே சொல்லப்பட்ட விஷ்யங்கள் தான்.பெரும்பாலும் இதை எந்த மனிதனும் ஒத்துக் கொள்வான். மற்றும் அந்தக் காலத்திற்கும் இந்தக் காலத்திற்கும் இருக்கிற வித்தியாசம், அந்தக் காலத்து மனிதனுக்கு இருந்த அறிவுக்கும், இந்தக் காலத்து மனிதனுக்குள்ள அறிவுத்திறமை இரண்டிற்குமுள்ள வித்தியாசத்தையும் எந்த மனிதனும் ஒத்துக் கொள்வான்.ஆனாலும் அவர்கள் பெரியவர்கள் தெய்வீகத் தனமை கொண்டவர்கள் அவர்கள் சொல்வதை நாம் கண்டிப்பாய் பின்பற்ற வேண்டும் அது எக்காலத்திற்கும் ஏற்றது என்று எதைஎதையெல்லாமோ சொல்லி அதை நிலைநிறுத்த்த் தகுந்த வண்ணத்தில் பேசுவார்கள். சுருக்கமாகச் சொல்லப்போனால் மனிதனும் மதமும் என்றாலே அறிவும் மடமையும் என்று தான் பொருள் கொள்ளவேண்டும்”””தந்தை பெரியார்.

மேலே சொன்ன பெரியாரின் விளக்கம் என் சிந்தனைக்கும் அறிவுக்கும் பொருத்தமாகப்படுவதால் இதை நான் ஏற்றுக் கொண்டேன்.


”மாற்றம் ஒன்று தான் என்றும் மாறாதது”என்பது வாழ்வின் அடிப்படைத் தத்துவம். இந்த அடிப்படைத் தத்துவத்தையே புரிந்து கொள்ள மறுத்து, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னதை, இன்றும் அது நூற்றுக்கு நூறு பொருத்தமாக இருக்கிறது என்று கூறிக்கொண்டு, கடவுளையும், மதத்தையும் தூக்கிப்பிடித்துக் கொண்டு இருக்கும் மனிதர்களை நாம் புறந்தள்ளுவோம்.

நட்சத்திரப்பதிவராக முதல் கட்டுரையாக ஏன் இதை அமைத்துள்ளேன் என்றால், உலக மக்கள் முன் உள்ள மிகப்பெரும் சவால் இந்த மதத் தீவிரவாதம் தான். இன்று இக்கட்டுரை எழுதும் தேதி 9/11. அனவருக்கும் தெரியும்..இந்தத் தேதியில் நடைபெற்ற கோரசம்பவம். தம் மதங்களை நிறுவனமாக்கி அதை முன்னிறுத்த சில இளைஞர்களை தேர்ந்தெடுத்து மூளைச் சலவை செய்யப்பட்டு இன்று மிகத் திவீரமாக பரவிவரும் கொடிய நோய்’மதத் தீவிரவாதம்”. கலைஞரால் சிவகங்கை சின்னப்புள்ளை என்று செல்லமாக அழைக்கப்பட்ட மைய உள்துறை அமைச்சர் ப.சி. யை நான் பெரிதும் மதிப்பது இல்லை.. இருந்தாலும் சமீபத்தில் அவர் சொன்ன ”காவித் தீவிரவாதம்” என்ற ஒற்றை வார்ததை அவர்மேல் பெரும் மதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.ஆம் தீவிரவாதம் எந்த மதத்தின் பெயரால் வந்தாலும் எதிர்க்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமை.

இறுதியாக பெரியார் சொல்வதை மேற்கோள் காட்டி இதை முடிக்கிறேன்.
“கடவுளாகட்டும் மதமாகட்டும்,பக்தியாகட்டும், மோட்சமாகட்டும் எதை வேண்டுமானாலும் வைத்துக்கொள்.அது தனிமனிதனுடைய தனிச் சொத்து. உலகத்திற்கான பொதுச் சொத்தல்ல..ஒழுக்கம், நாணயம்,உண்மை இதெல்லாம் பொதுச் சொத்து. மனித சமுதாயத்திலே இது கேடாயிருந்தால் அது சமுதாயத்திற்கு கேடு”


இன்னொரு கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவமோ, அதைத் தொடர்ந்து நடந்த இந்துத் தீவிரவாதிகளின் வெறியாட்டமோ, செப்டம்பர் 11 சம்பவமோ நடைபெறாமல் காக்க வேண்டியது நம் இளைஞர்கள் கையில் உள்ளது.. கடவுளையும் மதங்களையும் தூக்கிபோட்டு விட்டு மனித நேயம் காக்க வாருங்கள்

நன்றியுடன்
அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

23 கருத்துகள்:

ஜோ/Joe சொன்னது…

வருக ! வருக!

அ.வெற்றிவேல் சொன்னது…

நன்றி ஜோ!! இதன் முதல் கட்டுரையை படிக்க வேண்டுகிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே மிகப் பெரும் தோல்வியைச் சந்தித்து எங்கு இருக்கிறார் என்று விளம்பரப்படுத்தும் நிலையில் நாம் வணங்கும் அனைத்து கடவுள்களும் தோற்றுபோன சம்பவம் சுனாமி ஆகும்..இது கடவுள் இயற்கையிடம் தோற்றுப்போன சம்பவம்.. இரண்டாவது முள்ளிவாய்க்கால் அவலம்..இது அரசு அதிகாரத்தின் முன்னர் கடவுள் தோற்கடிக்கப்பட்ட சம்பவம்.. ஒட்டுமொத்தமாக ஒரு இனமே கடவுளுக்குப் பிடிக்காமல் போகுமா என்ன? அப்படி ஒரு இனமே பிடிக்காமல் போன கடவுள் இருந்தால் என்ன? இல்லாமல் போனால் என்ன?//

மதவாதி(கள், களால், களைப்) புறம் தள்ளக் கூடிய சிறப்பான கருத்து.

கடவுள் பற்றிய ஒரு சில கோட்பாடுகள், நம்பிக்கைகளை நான் விமர்சனம் செய்வதில்லை. ஆனால் குறியிடுகள், கட்டமைப்புகள், புனித நூல்கள் இவற்றை நான் ஏற்பது இல்லை.

சிறப்பான கட்டுரை.

நட்சத்திர நல்வாழ்த்துகள்

Ravichandran Somu சொன்னது…

சிறப்பான கட்டுரை.

PB Raj சொன்னது…

வெற்றி!

அருமையான அறிவுபூர்வமான கட்டுரை,
வாழ்த்துக்கள்!

ஓசை செல்லா சொன்னது…

நட்சத்திரமே வாழி? இல்லாத கடவுளை இல்லாமல் செய்வது கொஞ்சம் பைத்தியக்காரத்தனமாக படவில்லையா? :-)

Unknown சொன்னது…

ஒரு நல்ல கட்டுரை.இதுவும் சிந்திக்க தூண்டுகிறது.வாழ்த்துக்கள்.

உமர் | Umar சொன்னது…

மிகவும் சிறப்பான கட்டுரை. வாழ்த்துகள்.

இறைவனை நிறுவ மதவாதிகள் கைகொள்ளும் மிகப்பெரும் விஷயம், உலகம் தோன்றியது எப்படி என்பதே. அவர்களது கடவுள் சித்தாந்தங்களின் மீது சம்மட்டியால் அடித்து, உலகம் உருவானது கடவுளால் அல்ல; கடவுள் என்ற ஒன்று கிடையாது என்று ஆணித்தரமாக Stephen Hawking கூறியுள்ள புத்தகம் (The Grand Design) இந்த வாரம்தான் வெளியாகியுள்ளது.

கடவுள் என்னும் மூடநம்பிக்கைக்கு எதிரான விழிப்புணர்ச்சியை இன்னும் முனைப்பாய் எடுத்துச் செல்வோம்.

raja சொன்னது…

இன்னும் கூட சற்று விரிவாக இந்த கட்டுரையை நீங்கள் எழுதியிருக்கலாம் என்று எனது அபிப்ராயம்.. உங்கள் எழுத்து நடை படிக்க அலுப்பு தட்டாமல்.. சரளமாக இருக்கிறது.. பெரியாரின் கருத்துகளை மேற்கோள்களாக பயன்படுத்தியிருப்பது.. அழகியகோலத்தின் மத்தியில் கண்ட பூவைப்போல முத்தாய்பாக இருக்கிறது..

அ.வெற்றிவேல் சொன்னது…

நன்றி!ஜோ,ரவிச்சந்திரன்,கோவி.கண்ணன்,
ராயல்ராஜ்,ஒசைசெல்லா,கும்மி ராஜா,நந்தா ஆண்டாள் மகன்..வருகை புரிந்ததற்கும் வாழ்த்தியதற்கும்

cheena (சீனா) சொன்னது…

அன்பின் வெற்றிவேல்

நட்சத்திர நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா

அ.வெற்றிவேல் சொன்னது…

நன்றி! சீனா..வந்ததற்கும் கருத்து தெரிவித்தமைக்கும்

Thamizhan சொன்னது…

அருமையான கட்டுரை.யாரும் யார் மனத்தையும் புண் படுத்த வேண்டாம். பக்தி தெவையென்றால் அதை வீட்டில் வைத்துக் கொள். வீதிக்கு வந்து அடுத்தவர்களைத் தொந்தரவு செய்வதோ ஏமாற்றுவதோ,உண்மையான பக்தியல்ல. அது வியாபாரம் ,ஏன் விபச்சாரம் என்றே சொல்லலாம்.ஒழுக்கம் பொது. பொய் சொல்லி,ஏமாற்றி வாழ்வதைக் கடவுளின் மேல் போடுவதை ஒழுக்கம் என்றும்,பக்தி என்றும் ஏமாற்றுவதை எப்படி ஒத்துக் கொள்ள முடியும்?

தமிழினியன் சொன்னது…

//
மனிதனின் இன்றைய வாழ்வே கேள்விகளால் ஆனது.ஆனால் மத நம்பிக்கைகளை மட்டும் கேள்விகள் கேட்கக்கூடாது என்பதே ஒரு பெரிய பித்தலாட்டம்..
//

இன்றைய நிலையில் இந்த மதவாதிகள் கேள்வி கேட்பதை மட்டுமல்ல, விவாதத்திற்குக் கூட தயங்குவது, அவர்கள் புரிதலின் போதாமையாலா அல்லது பயத்தாலா என்பது கேள்விக்கு உரியதாகவே உள்ளது.

இயல்பான நடையோடு அருமையான மேற்கோள்கள்

இறைகற்பனைஇலான் சொன்னது…

தோழர்க்கு வணக்கம். மதம் என்பது வெளி மாநிலத்தாரின் வணிகக்கூடாரமாக அமைக்கப்பட்ட்டது.
கோயில்,மசூதி,சர்ச் ஆகியவற்றின் பணத்தை ,இடத்தை அனுபவிக்கும் கூட்டமே மதத்தைக்காப்பாற்றுகிறது. அவைகளின் சொத்துக்களை பிடுங்கிவிட்டு இமாம்,பாதிரி,புரோகிதர்,பூசாரிகளை இல்லாமல்[வேறு உற்பத்திசார் வேலைகளில் வைத்து] ஆக்கிவிட்டு பி கடவுள்,மதம் எங்கே என்று பார்த்தால் ஒன்றும் இருக்காது என்றும் பெரியார் சொல்லியுள்ளார்.இந்தச்சிந்தனை ஆட்சியாகாமல் நிறைவேற்ற முடியாது.பெரியார் மேளும் சொல்கிறார்.. நீங்கள் ஆட்சிக்கு வரமாட்டீர்களா? என்று என்னைக் கேட்கலாம், வருவோம்.எப்போது என்றால் ,நாம் போட்ட உத்தரவை பிறர் மாற்றமுடியாத சூழல் வரும்போது வருவோம். என்றுசொல்லியுள்ளார்.

ஜமாலன் சொன்னது…

முதல் கட்டுரையே முத்தாய்ப்பான கட்டுரை. அடித்து விளையாடுங்கள். உங்கள் கட்டுரை கடவுளை காப்பாற்றும் மதவாதிகள் என்கிற புள்ளியை சரியாக பிடித்துள்ளது.

கடவுள் இயற்றிய நூல் என்று சொல்வதை நம்பாதீர்கள் என்றார் புத்தர். கடவுளை மற! மனிதனை நினை!! என்றார் வள்ளலார். கடவுளை நம்பாதே கடவுளை பரப்புபவன் அயோக்கியன் என்றார் பெரியார். நீட்ஷே கடவுள் இறந்துவிட்டான் என்றார். இன்று ஹாவ்கிங் போன்ற தலைசிறந்த விஞ்ஞானிகள்.. கடவுளின் படைப்பு பணியை காலி செய்துவிட்டு.. கடவுளே பிரபஞ்ச படைப்பிற்கு தேவையில்லை என்கிறார்கள். கடவுளின் நிலை மேலும் மேலும் கவலைக்கிடமாகத்தான் உள்ளது. கடவுளை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். )))

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

மிக அருமையாக விளக்கி எழுதியுள்ளீர்கள்.
ஆம்; உங்களைப்போல் சுனாமியும்; முள்ளிவாய்க்காலும் என்னையும் திருப்பிப் போட்டது.

அ.வெற்றிவேல் சொன்னது…

நன்றி தமிழன், தமிழினியன்,இறைகற்பனைஇலான், ஜமாலன்,யோகன் பாரிஸ்.வந்ததற்கும் கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கும்

Thenammai Lakshmanan சொன்னது…

மிக அருமையான கட்டுரை வெற்றி..
நட்சத்திரப் பதிவருக்கு வாழ்த்துக்கள்..:))

-/சுடலை மாடன்/- சொன்னது…

தந்தை பெரியார் பிறந்தநாள் வாரத்தில் பொருத்தமான பதிவு. சிற்ப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

நன்றி - சொ.சங்கரபாண்டி

Venkatesa Perumal சொன்னது…

நறும் புனலில் நறுமணம் கமழ எழுதும் வெற்றி அவர்களே, தங்களை பெரியார் தாசன் என்று சொல்ல முடியுமா? இறை நம்பிக்கை உங்களிடம் அதிகமாக வைத்து கொண்டு பொது சபையில் இப்படி பதிவு செய்வது நியாயம் கிடையாது. தாங்கள் ஒவ்வொரு ஆண்டும் செல்லும் கோவில் தான் எத்தனை? அதில் திருப்பதி ஒன்று. இப்படி இருக்க இது போல் பதிவுகளை பதிவு செய்ய வேண்டாம் என்று கருத்தை பதிவு செய்ந்தால் அதை அழிப்பது தவறான எடுத்துகாட்டு ஆகும். பொது வாழ்க்கையிலும் , பொது பதிப்புகளுக்கும் எத்தகைய கருத்துகளையும் ஏற்கும் பெருந்தன்மை இருந்தால் தான் வர வேண்டும். தந்தை பெரியார் வழியில் ...உள்ளதைச் சொல்வோம் அதையும் உரக்கச் சொல்வோம் என்று போட்டுவைத்து கொண்டு பெரியார் இப்படியா செய்வார் என்று எண்ணி பார்க்க வேண்டும்.

அ.வெற்றிவேல் சொன்னது…

நண்பர் வெங்கடேசப் பெருமாள்..வருகை புரிநத்தற்கும் கருத்து தெரிவித்தமைக்கும் நன்றிகள்.

என்னை பெரியார் தாசன் என்று சொல்லிக் கொண்டது இல்லை..இது பெரியாரைப் பற்றிய கட்டுரையும் கிடையாது.கோவில் என்று பார்த்துக் கொண்டால் , என் காலடி படாத கோயில்களே தமிழ்கத்தில் இல்லை..ஒரளவு இந்தியாவிலும் இல்லை.வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு காரணங்களுக்காக.. இங்கு நான் கேவிக்குறியாக்குவது இறை நம்பிக்கையை மட்டுமே. அது எனக்கு இல்லை என்பதை தங்களுக்கு நீருபிக்க வேண்டியது இல்லை..என் மனசாட்சிக்கு அது தெரியும் . தமிழ் சைவம் ,வைணவ இலக்கியத்தில் எனக்கு அதிக ஆர்வம் உண்டு என்பதியும் இங்கு பதிவு செய்கிறேன்...

Unknown சொன்னது…

Dear Vetrivel,

I felt very happy to read your post. I belong to your catagory only. Thank you very much.

கருத்துரையிடுக