சனி, 31 ஜூலை, 2010

நட்பு

(இன்று நண்பர்கள் தினம்..அதற்காக எழுதப் பட்ட கவிதை)

அண்ணன் தம்பி அக்கா தங்கையென
எண்ணற்ற உறவுகள் ஏராளம் இங்குண்டு
கண்ணில் பயிராகும் காதலும் ஒரு உறவுதான்

அத்தனை உறவுக்கும் ஆதாரம்
சொந்தம் என்றொரு தொடர்புண்டு

ஆதாரம் எதுவுமின்றி ஆகாயம் வரும்
சூரியனைப் போன்றதொரு தூய உறவுண்டு

ஆதாயம் எதுவுமின்றி அதுவாய்ச் சுரக்கும்
தாயின் பாலும்
சேயின் சிரிப்பும்
பூவின் தேனும்
புதுப் புனல் நீரும்

தூய்மையாய் இருப்பது போல்-நட்பும்
வாய்மையாய் இருந்திட்டால் வாழ்க்கை வசமாகும்

அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

14 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் சொன்னது…

//தாயின் பாலும்
சேயின் சிரிப்பும்
பூவின் தேனும்
புதுப் புனல் நீரும்

தூய்மையாய் இருப்பது போல்-நட்பும் //

nalla kavithai..

Friendship Day VAZHTHTHUKKAL.

sen சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
sen சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
sen சொன்னது…

//ஆதாயம் எதுவுமின்றி அதுவாய்ச் சுரக்கும்//
மனதில் நின்ற வரி... நன்றி அண்ணா....

செ.சரவணக்குமார் சொன்னது…

நண்பர்கள் தின வாழ்த்துகள் சார்.

அன்புடன் நான் சொன்னது…

நல்லா சொல்லியிருக்கிங்க பாராட்டுக்கள்....
உங்களுக்கு நண்பர்கள்தின வாழ்த்துக்கள்.

அ.வெற்றிவேல் சொன்னது…

cresan:யார் அது வலைப்ப்திவு நிர்வாகி.நான் தானே ..நான் எதையும் நீக்கவில்லையே..

அ.வெற்றிவேல் சொன்னது…

@சரவணகுமார் , கருணாகரசு..வ்ருகை புரிந்ததற்கும் வாழ்த்துக்கள் பத்வி பண்ணியமைக்கும் நன்றிகள்

தூயவனின் அடிமை சொன்னது…

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

Thenammai Lakshmanan சொன்னது…

//தாயின் பாலும்
சேயின் சிரிப்பும்
பூவின் தேனும்
புதுப் புனல் நீரும்/

அருமை வெற்றி... நல்ல கவிதை.. நண்பர் தின வாழ்த்துக்கள்..

பா.ராஜாராம் சொன்னது…

நல்ல கவிதை.

நண்பர்கள் தின வாழ்த்துகள், வெற்றி சார்!

அ.வெற்றிவேல் சொன்னது…

நன்றி இளம் தூயவன்.,தேனம்மை..பா.ரா..

என்ன பா.ரா..தேனம்மை..தங்கள் சகவாசம் நானும் ஏதாவது எழுதாலேமே என்று..உண்மையிலேயெ நன்றாக இருந்தால் உங்கள் கவிதைகள் தான் அதற்கு காரணம்

sakthi சொன்னது…

அத்தனை உறவுக்கும் ஆதாரம்
சொந்தம் என்றொரு தொடர்புண்டு

ஆதாரம் எதுவுமின்றி ஆகாயம் வரும்
சூரியனைப் போன்றதொரு தூய உறவுண்டு

நல்ல கவிதை

அ.வெற்றிவேல் சொன்னது…

நன்றி..ஷக்தி வருகை புரிந்ததற்கும் வாழ்த்தியதற்கும்

கருத்துரையிடுக