நண்பரின் கேள்விகள்..
அண்ணா....
இதுவரை அதிகம் முறை தி.மு.க வுக்கு வாக்களித்ததால் கேட்கிறேன்....
..2 லட்சம் நம் சொந்தங்கள் உருத்தெரியாமல் அழிக்கப்பட்டது... இன்னும் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் முகாம்களில்....
..ஒரு நாட்டின் 40 வருட ஆய்விற்க்குக் (மக்கள் ...வரி,உழைப்பு) கிடைத்த பலனான செயற்கைகோளில் 2g அலைக்கற்றையில் செய்த 176 ஆயிரம் கோடி ஊழல் மூலம் நடத்தப்பட்ட உழைப்புச்சுரண்டல்....
..சேது சமுத்திர திட்டத்தில் அடித்த 2500 கோடி (திட்டம் தோல்வி)....அடிக்கடி கொடூரமாக இலங்கை ராணுவத்தால் கொல்லப்படும் நம் மீனவர்கள்...
..மதுரையில் ஓரு 10க்கு 10 கடை போட்டாலே "கப்பத்துக்கு" வரும் அழகிரியின் ஆட்கள்... தென் மாவட்டம் முழுவதும் நடக்கும் அவரது "தனி" அரசாங்கம்....
85000 கோடிக்கு மேல் பெயர்த்தெடுக்கப்பட்ட கிரானைட் மலைகள் (அரசுடையது)
..4000 கோடிக்கு நம் வரிப்பணத்தில் "தொலக்காட்சி" கொடுத்துவிட்டு , வருடத்திற்கு 4500 கோடி கேபிள் இணைப்பில் சம்பாதிப்பது...
..காப்பீட்டுத்திட்டம் என்கிற பெயரில் star insurance மூலம் ஸ்டாலின் குடும்பத்துக்கு வருடத்திற்க்கு வரும் வருமானமானமாக சொல்லப்படும் 300கோடி...
அண்ணா இன்னும் சொல்ல எனக்குத்தெரிந்து 20 பக்கங்களுக்குமேல் இருக்கிறது....
"நல்லகண்ணு" "தமிழருவி மணியன்" போன்ற நல்லவர்களை தமிழ் நாட்டு மக்கள் நிறைய பேருக்குத் பெயர்கூட தெரியவில்லை... இந்த நிலையில்...
... மஞ்சள் துண்டு போட்டு பகுத்தறிவு பேசி "தம் மக்கள்" நலம் ஒன்றே குறிக்கோளாய் இருக்கும்.அதற்காக மட்டுமே வாழ்ந்துகொண்டிருக்கும் நம் தமிழினத்தலைவருக்கு ஓட்டு போட வேண்டுமா...?... உங்கள் மனசாட்சியோடு கூடிய பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்... நன்றி
முகநூலில் தம்பி அரவிந்த் யுவராஜ் என் குறிப்புக்கு, போன பதிவுக்கு போட்ட பின்னூட்டம் மேலே உள்ளவைகள்..
தம்பி அரவிந்த் யுவராஜ் போன்றவ படித்த சிந்திக்கத் தெரிந்தவர்கள், பெரு நகரங்களில் வசிக்கும் இன்றைய இளைய தலமுறையினர், இணையத்தில் அரசியல் கற்றுக் கொள்ளும் அனைவருக்கும் இலவசமும் ஊழலும் இந்த ஆட்சியின் சாபக்கேடாகத் தெரிகிறது..
எந்தவித பின்புலனும் இன்றி படிப்பு,உழைப்பு மட்டுமே மூலதனமாக்க் கொண்டு குடும்பம் விட்டு விலகி நாடுவிட்டு நாடுவந்து, பாலைவனத்தில் வெயிலிலும் குளிரிலும் தனியாக்க் கிடந்து கஷ்டப்படும் எனக்கு மட்டும் இருக்காதா? ஊழலற்ற நேர்மையான திறமையான அரசு தமிழகத்தில் இருக்க வேண்டும்..மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் அனைத்தும் முழுமையாக பயனாளியைச் சென்று சேரவேண்டும் என்ற ஆசையெல்லாம் எனக்கும் உண்டு.நானும் உங்களை போன்ற நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன்.
தம்பி சீமானுக்கு நிகரான தமிழ் உணர்வு கொண்டவன் தான்.
ஆனால் நடைமுறைச் சிக்கல்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்காமல் இருக்க என் வயசும் நான் கற்றுக் கொண்ட குறைந்தபட்ச அரசியல் அறிவும் என்னை தி.மு.கவிற்கு ஆதரவாக எழுதவும் பேசவும் செய்கிறது.
நண்பர் எழுதியது போல் நல்லகண்ணு தமிழருவி மணியன் போன்ற நல்ல அரசியல்வாதிகள் திமுகவிற்கு மாற்றாக இத்தேர்தலில் நிற்கவில்லை. நல்லவர்கள் மட்டும் போதாது . வல்லவர்களாகவும் இருக்க வேண்டும். திமுகவிற்கு மாற்றாக முன்னிருத்தப்படுவது, அதிமுக என்ற கம்பேனியின் அடாவடித் தலைவி ஜெயலலிதா..அவருக்கு ஆலோசகர் ராஜகுரு சோ.. சோ நேர்மையானவர் என்பது மட்டும் போதுமானதா? சோ வின் ஆலோசனைகள் எப்படி தமிழருக்கும் தமிழினத்திற்கும் ஆதரவாக இருக்கும் இருக்க முடியும்.. 70களில் இருந்து இன்றுவரை சோ தமிழின விரோதியாகத் தானே நான் பார்த்து வருகிறேன்.அவர் அறிவுரையின் படித்தானே வைகோ அந்த முகாமில் இருந்து வெளியேற்றப்பட்டார்..”சோ” கரப்பான்பூச்சி சுலபமாக அடித்துவிடலாம் என்று மற்றுமொரு பின்னூட்ட்த்தில் எழுதி இருக்கிறீர்கள். சரியான உதாரணம் தான். அணுகுண்டுக்கும் தப்பிக்கும் ஆற்றல் பெற்றதல்லவா கரப்பான்பூச்சி ..அதை எப்படி ஒழிக்க முடியும்?
மூன்று முக்கியமான குற்றச்சாடு திமுக அரசு மீது..
இலவசம், ஊழல், குடும்ப ஆதிக்கம்..
புதிதாக ஓட்டுரிமை பெற்ற படித்த இளைஞர்கள மற்றும் இணையத்தில் பெரும் நேரம் உலவுபவர்களுக்கு இலவசம் ஏதோ வேப்பங்காயாய் கசக்கிறது..இலவசம் இணையத்தில் கதை அளப்பவர்களுக்கு அல்ல என்று முன் பதிவுலேயே சொல்லியுள்ளேன்.. புரியாதவர்களுக்கு மற்றுமொரு உதாரணத்துடன்..
என் கூடப்பிறந்த தம்பியும் அவன் மனைவியும் சிவகங்கை பக்கத்தில் ஒரு கிராமத்தில் 24 மணி நேர மருத்துவமனை நட்த்துகிறார்கள். 2006 வரை அங்கு நாள் தோறும் நடத்தப்பட்ட பிரசவங்கள் குறைந்த்து 10 முதல் 15.. இன்று ஒன்று கூட இல்லை.. அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தான் பிரசவம் பார்க்கிறார்கள்.இங்கு கவனிக்க வேண்டியது என் தம்பியின் ஒரு நாள் வருமான இழப்பல்ல.. அந்தக் கிராமத்தின் ஆரம்ப சுகாதார நிலையம் இத்தனை பிரசவஙக்ளை பார்க்கும் வண்ணம் மேம்படுத்தப்பட்டுள்ளது..
என் சொந்த ஊரில் பெயர் பெற்ற மெட்ரிகுலேஷ்ன் பள்ளி தன் தர வரிசையில் இருந்து இறங்கிவிட்டது..காரணம் முக்கியமான திறமையான ஆசிரியர்கள் எல்லோரும் எந்தவித கையூட்டும் கொடுக்காமல் அரசுப் பள்ளிகளில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்கள்.இதுவரை மெட்ரிக் பள்ளிகளில் தொகுப்பூதியம் பெற்றவர்கள் முறைப்படியான ஊதியம் பெறுகிறார்கள்.
நுழைவுத் தேர்வு ரத்தானாதால் மட்டும் கிராமப்புற இளைஞர்கள் 54000 பேர் பொறியியல் கல்லூரியில் நுழைந்துள்ளார்கள்.
பள்ளிகல்வித் துறையில் மகத்தான சாதனை இந்த 5 வருட்த்தில் நடைபெற்றுள்ளது.. நிகழ்காலத்தில் மட்டுமே குடியிருக்கும் நண்பர்களால் இந்தச் சாதனையை அங்கீகரிக்க முடியாது .ஏனென்றால் இதன் பலன் இன்று தெரியாது என்பது தான்
இதுமாதிரி என்னால் ஆயிரம் உதாரணங்களை சொல்ல முடியும்..
அடுத்து ஊழல்..
ஊழல் என்பது இந்தியாவின், தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்ட்து என்பது வேதனைதான்..ஆனால் உங்களால் ஜெ.அரசு ஊழலற்ற அரசாக இருக்கும் என்று உத்தரவாதம் மனசாட்சியுடன் கொடுக்க முடியுமா? அளவுகளில் வித்தியாசப்படலாம்.. ஊழலற்ற வெளிப்படையான ஆட்சி அமையுமா ஜெ.அரசால்? டான்சி ஊழலில் போட்ட கையெழுத்து தன்னுடையது அல்ல என்று சொல்லக்கூடியவர். கொள்ளையைடிக்க என்றே இல்லாத ஒரு குடும்பத்தை உருவாக்கிக் கொண்டவரிடம் எப்படி ஊழலற்ற நிர்வாகம் நடக்கும் என எதிர்பார்க்கலாம்? தொகுதிப் பங்கீடே வெளிப்படையாக நடைபெறவில்லை.. போயஸ் தோட்டத்தில் தனி நபராக முடிவெடுத்து, இத்தனை இடங்கள் உனக்கு என்று எழுதி தோட்டத்திற்கு வெளியில் போட்டு அதை எடுத்துக் கொண்டு பிரச்சாரத்திற்கு கிளம்பியவ்ர்கள் தான் நம் தோழர்கள். அதிகமாக தமிழ் தமிழ் என்று பேசியதால் அந்த வாய்ப்பும் கிடைக்காமல் போனவர்தான் வைகோ.
தென்னிந்தியாவிலேயே பெரிய பணக்காரக் குடும்பம் கலைஞருடையது என்றும் ஒரு குற்றச்சாட்டு.. சன் தொலைக்காட்சி ஆரம்பித்தது , அது தென்னிந்தியாவில் முதல்தர தொலைக்காட்சி நிறுவனமாக உருவெடுத்த்து எல்லாம் கலைஞர் ஆட்சிக் கட்டிலில் இல்லாத 1992- 96 வரை. அதன் பின் அதன் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்பட்டால் அதற்கு என்ன செய்ய முடியும்? அதே சமயம் ஆரம்பித்த ஜே.ஜே தொலைக்காட்சி திறம்பட செயல்பட்டு இருந்தால் அதுவும் தான் இந்நேரம் பெரிய நிறுவனமாக உருவெடுத்து இருக்கும்.. பெரிய தொழில் முதலைகளாக டாடாவையும் பிர்லாவையும் பின்னால் உருவாகிய அம்பானியையும் பார்த்த கண்ணுக்கு திருவாரூர் குடும்பம் பெரிய அளவில் கண்ணை உறுத்துவதற்கு என்னசெய்ய முடியும்?
இதுவரை எத்தனையோ நாடாளுமன்ற உறுப்பினர்களை மதுரை டெல்லிக்கு அனுப்பியுள்ளது.. ஆனால் அழகிரியால்தான் மதுரையைச் சுற்றி சில தொழில் நிறுவனங்கள் வரத் தொடங்கியுள்ளன. பன்னாட்டு விமான நிலையமாக மதுரை மாற வேண்டுமென்றால் , தொடங்கியுள்ள பிளாஸ்டிக் ஆராய்ச்சி நிலையம், ஐ.டி பார்க் நன்கு செயல் பட வேண்டுமென்றால் நான் அழகிரியை ஆதரிக்கத் தான் செய்வேன்.மூடி இருந்த ஸ்பிக் மறுபடி இயங்க ஆரம்பித்துள்ளது அழகிரியால் தான்..
இணைய எழுத்தாளர்களின், ஊடகங்களின் திமுகவின் எதிர்மறைப் பிரச்சாரம் தங்கள் சிந்தனையை தடுமாற வைத்துள்ளது.இல்லை என்றால் சேது சமுத்திர திட்டம் நின்றதற்கு திமுகவை குறை கூறலாமா. ராமர் பாலம் என்று குறைகூறி அவர்கள் கும்பல் தானே நீதிமன்றம் படியேறி தடைவாங்கியவர்கள்.
மதுரையைச் சுற்றியுள்ள கிரானைட் மலைகளை வெட்டி எடுப்பவர் அதிமுக தலமைக்குத் தான் மிகவும் நெருக்கமானவர்
நியாயமான தமிழ் உணர்வைக்கூட ஏதோ தேசத்துரோகமாகப் பார்க்கும் சோ, ஜெ. கும்பலுக்கு ஆதரவாக தமிழ் உணர்வாளர்கள் வாக்கு கேட்டு வருவது ஆச்சர்யமாக இருக்கிறது தேர்தலுக்கு முன்னரே வைகோவை வெளியேற்றி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட ஜெ.வை எப்படி இவர்கள் ஆதரிக்கிறார்கள். போன ஜெ.ஆட்சியில் வைகோ.நெடுமாறன்,சுப.வீ போன்றவ்ர்களுக்கு நேர்ந்த்து தான் இவர்களுக்கும் என்பது கூடவா இவர்கள் அரசியல் அறிவுக்கு எட்டவில்லை.. பிரபாகரனை பிடித்து வந்து ஒப்படைக்க வேண்டும்,போர் என்றால் மக்கள் சாகத் தான் செய்வார்கள் என்று சொன்னவர் ஜெ. ஆரம்பத்தில் திமுக காங்கிரஸை கழட்டிவிட்த் தயாரான சமயம் , திமுகவிற்குப் பதிலாக காங்கிரஸ் கோட்டையில் நுழையத் தயாரானவர் தான் ஜெ. மற்றவர்,மிகுந்த ராஜதந்திரமாக நினைத்துக் கொண்டு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தன்னோடு கூட்டு சேர்வார்கள் என்ற நம்பிக்கையில் காங்கிரஸை பற்றி ஒரு கேள்வி கேட்காதவர் தான் கருப்பு எம்ஜிஆர் குடிகாரக் குப்பன் அண்ணன் விஜயகாந்த். இவர்களுக்கு தமிழ் ஆதரவாளர்கள் ஆதரவு.. நான் எப்படி ஆதரிக்க முடியும்?
இது ஜீவாவின் காலமல்ல.. அரசுப் பொறுப்பு வேண்டாமென்ற பெரியாரின் காலமுமல்ல.. கண்ணியமிக்க காமராஜ் காலமல்ல..அரசுப் பொறுப்புக்கு வருவதே சம்பாதிக்க என்ற நிலையில் வளர்ச்சித் திட்டங்கள் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் யாரால் நிறைவேற்றப் படுதோ அவர்களுக்கே வாக்களிக்க வேண்டும்.. ஊழலற்ற ஒருவரை அழைத்துவர வேண்டும் என்றால் நாம் எங்கு போவது?
சுருக்கமாக ஒன்று
ஊழல்+ அதிகார போதை தரும அடாவடித்தனம் + நியாயமான கோரிக்கைக்கு கூட செவி சாய்க்காத சண்டைக்கோழி ஒரு பக்கம்
ஊழல் +அதிகாரம்+ வளர்ச்சித் திட்டங்கள் + மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் இது ஒரு புறம்
இந்த இரண்டில் தாங்கள் எதைத் தெரிந்தெடுக்க விரும்புகிறீர்கள் என்பதை யோசியுங்கள்..
நின்று போன பெரம்பூர் மேம்பாலமே 5 வருடங்களாக கட்டி முடிக்கப்படாமல் திமுக ஆட்சி மறுபடி வந்து தான் அதனை முடித்தார்கள்.
அடுத்த ஐந்தாண்டுகளில் குடிசை இல்லா மாநிலமாக தமிழகம் விளங்கும் என்பதற்காகவது ஆதரவளிக்க வேண்டாமா?
கிராமப்புற மாணவர்கள், தாய்மார்கள் பயனடைய வேண்டுமா?
இதுவரை நடைபெற்றுள்ள வளர்ச்சித் திட்டங்கள் மக்கள் நலத்திட்டங்கள் தொடர திமுக விற்கு வாக்களியுங்கள்.திமுகவிற்கு வாக்களிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்
அன்புடன்
வெற்றிவேல்..
பின்குறிப்பு: காங்கிரஸ் 63 தொகுதிகளிலும் தோற்கடிக்கப்பட்டால் அதிகம் சந்தோசப்படுவேன்.. அதுவும் தமிழ்நாடு காங்கிரஸில் புதிதாக உருவாகியுள்ள ராகுல் கோஷ்டியான இளைஞர் காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரும் பிணைத்தொகை இழந்தால் இந்தத் தேர்தல் முடிவுகளில் உச்சபட்ச சந்தோசம அதுவாகவே இருக்கும்
22 கருத்துகள்:
சரியான நிலைபாடுதான். நானும் இதனை ஏற்றுகொள்கிறேன் .
திமுக எதிராக வாக்களிக்கவேண்டும் என்பதற்காக அதிமுகவிற்க்கு வாக்களிப்பது என்பது மாபெரும் மடத்தனமேயாகும்.நல்ல சிந்திக்க தெரிந்தவர்கள் இன்றைய அரசியல் நிலைமையை சீர்தூக்கி பார்த்து வாக்களிக்க முடிவெடுத்தால் அது திமுக வுக்கு மட்டுமே முடியும்.அதிமுக வுக்கு வாக்களிப்பது தமிழக தமிழருக்கு துயரமாகவே முடியும்.
Whatever you say they never gonna listen because they hate KK. Just leave it.
athu eppadi vilai vaasi uyarvai patri konjam kooda kavalaipadatha oru thanmai..?? veli naattil thaane irukkirom india ekkedu kettu ponaal enna engira nokkama.?? 1Rs. arisiyil saappadu saappida ungalaal mudiyuma..?? athanaal bayanadainthavargal kadathalkaarargal..!! stalinukku yen thunai muthalvar pathavi.. veru thaguthiyaanavargal yaarumey illaya..?? azhagirikku centrla minister pathavi vagikka enna thaguthi irukkirathu...?? kanimozhikkum minister post kettu deli sendra kevalathai engey sendru muraiyiduvathu...!! azhagiriyin rowdy thanathirku ungal support veru..!! 1.76 lakhs crore scam ungalukku avvalavu saaatharanam aagi vittathu..!! cinemaa thuraiyai kooda vittu vaikka villaye avargal..!! siru tholil anaithum nasinthu vittathu ungalukku kannukku theriya villaya..?? ivargal kudutha 100rs velaikku aatkal kidaikkaamal seithu vittathey athuvaavathu theriyuma..?? sambar vaithu saappida vendum endraal naan periya muthalaaliyaaga than irukka vendum egira soolnilai indru..!! ivvalavu saaathanaigalai seithum pinbu yen kurukku valiyil votukku panam kudukka vendum..???
உங்கள் கருத்து ஏற்புடையது இல்லை. மன்னிக்கவும் நீங்கள் கற்றிந்த முட்டாள்
நல்ல தெளிவான விளக்கங்கள் தந்துள்ளீர்கள், பாராட்டுக்கள். நானும் என்னுடைய தளத்தில் 'கலைஞரா ஜெயலலிதாவா?'என்றொரு கட்டுரை எழுதியுள்ளேன்.படித்துப் பாருங்கள்.
அன்புடன்,
அமுதவன்.
மிக மிக சௌகர்யமாக பேசுகிறீர்கள்... அடிப்படைத்திட்டங்கள் அனைத்தும் பரண்மேல் போடப்பட்டது திமுக ஆட்சியில் தான்..தண்ணீர்,மின்சாரம்,நதி நீர் பிரச்சினைகள்,சட்டம் ஒழுங்கு சீரழிவு, ஊடக ஜனநாயகம், இயற்கை வளச்சுரண்டல்கள்( மிக அழகாக அதிமுக நபர் என்று குற்றசாட்டுகிறீர்கள்..அதை தடுக்கமுடியாத கருணாநிதிக்கு முதல்வர் பதவி எதற்கு) எல்லாவற்றையும் விட விலைவாசி அதைப்பற்றி கேட்டால் உங்கள் தலைவர் போல மத்திய அரசு தான் காரணம் என்று கைகாட்டாதீர்கள். கடைசியில் நீங்கள் உங்கள் தமிழன தலைவரை அம்பானி,டாட்டாவோடு ஒப்பீட்டு அப்ரூவர் ஆக மாறியதற்கு நன்றி.
யாரை திருப்தி படுத்த அம்மா வைகோவை பதினெட்டு மாதம் பொடாவில் வைத்தார்
யாரை திருப்தி படுத்த அம்மா 1000 கோடி வாங்கிக்கொண்டி வைகோவின் அரசியலை நிர்மூலப்படுதினார்
தர்மபுரியில் 3 மாணவிகளை எரித்து கொன்றது யார்?
போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று சொன்னது யார்?
பிரபாகரனை கைது செய்து , தூக்கில் இட வேண்டும் என்று சட்டசபையில் திர்மானம் போட்டது யார்?
தொட்டில் குழந்தை முதல் சுடுகாடு கூரை வரை ஊழல் செய்தது யார்?
30௦ வயது வளர்ப்பு மகனை தத்தெடுத்து , கோடியில் திருமணம் செய்து பின் கஞ்சா கேஸ் போட்டது யார்?
செரீனா மீது கஞ்சா கேஸ் போட்டது யார்?
டி என் சேஷனை விமான நிலையம் முதல் ஹோட்டல் வரை அடித்தது யார்?
சந்திரலேகா மீது திராவகம் விசியது யார்?
சுப்ரமணிய சாமிக்கு ஆபாச ஷோ காட்டியது யார்?
வக்கீல் சண்முகசுந்தரத்தை தாக்கி முடக்கி போட்டது யார்?
மத்திய அமைச்சர் அருணாசலம் பயணம் செய்த விமானத்தில் ஜாதி காரணம் காட்டி ஏறாமல் இருந்தாது யார்?
ராஜிவின் மரணத்தில் வெற்றி பேரு.. பின் அவரை கொச்சை படுத்தியது யார்?
கட்சியை சசிகலா குடும்பத்திடம் அடகு வைத்திருப்பது யார்?
௧.௫ லட்சம் அரசு ஊழியரை ஒரே கையெழுத்தில் வீட்டுக்கு அனுப்பியது யார்?
பெண்களை இரவு உடை கூட அணிய விடாமல் கைது செய்யதது யார்?
பத்திரிக்கையாளர்களை சென்னை பிச் ரோடில் அடித்து உதைத்தது யார்?
கண்ணகி சிலையை ஒழித்து வைத்தது யார்?
சீரணி அரங்கத்தை இடித்தது யார்?
மதமாற்ற தடை சட்டம், ஆடு கோழி பலி தடை சட்டம் கொண்டு வந்தது யார்?
ஒரு ரூபாய் சம்பளத்தில் கோடிகளை சேர்த்துவைத்து யார்?
பொது மக்களுக்கு வழி விடாமல் எஸ்டேட் வெளி போட்டு அடைத்தது யார்?
பஞ்சமி நிலத்தை ஆக்ரமித்த கம்னிஸ்ட் புகார் சொன்னது யார் மேலே?
சென்னாரெட்டி தவறாக நடந்து கொண்டார் என்று சொன்னது யார்?
மக்களிடம் இநருந்து தன்னை அந்நிய படுத்தி , ஹெலிகாப்ட்டர் பயணம், கூடுக்குள் பிரசாரம் செய்வது யார்?
சுனாமி வந்த நேரத்தில் மதியம் 1 மணிக்கு மேல் தான் வெளிய தூங்கி எழுந்து போயஸ் தோட்டத்தின் வெளியே வந்து .. சுனாமிய , என்ன என்று கேட்ட முதல்வர யார்?
சசிகலா, நடராஜன், திவாகரன், தினகரன், மகாதேவன், சுதாகரன் , இளவரசி, வெங்கடேஷ்.. வைகுண்டராஜன் , இன்னும் பலர் பலர்.. இவர்கள் எல்லாம் யார்?
நீங்கள் சொல்வது தவறு.
நம் கட்சிதான் மறுபடியும் ஆட்சியை அமைக்கும். இப்போதே வாழ்த்துக்களை கூறுகிறேன்.
எனக்கு உடன்பாடில்லை !
திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் இந்தத் தேர்தலில். எதிர்த்து கழுதை குதிரை நின்றால் கூட அந்தப் பிராணிகளுக்கே ஓட்டு. திமுகவிற்கு அல்ல !
ஒரே கட்டுரையில் திமுக ஆதரவாகவும்......காங்கிரஸ் எதிர்பாகவும் எழுத முடியம்? உங்களை தவிர?
செஞ்சோற்று கடன் தீற்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தயாடா வெற்றிவேல்..........வஞ்சகன்....கரு நாய்(கருணாநிதி)யாடா....வெற்றிவேல்..........வஞ்சகன்....கரு நாய்(கருணாநிதி)யாடா....
தீதும்(காங்கிரஸ் 63) தீதும்(திமுக) பிறர் தர வாரா.
ருவாண்டா சத்திய குமார்
ஐந்தாண்டு திமுக ஆட்சி பற்றி ஏராளமாக முன்னரே எழுதியுள்ளோம்.
ஊழலில் சிகரம் தொட்டது மட்டுமல்ல, அது பற்றிய விமர்சனங்களை
ஜாதியைச்சொல்லி திசை திருப்ப பார்த்த ஆட்சி. ஒரு அமைச்சர்
சிறைக்கு சென்ற பிறகும், மனைவியையும் துணைவியின் மகளையும்
மத்திய புலனாய்வுத் துறை விசாரித்த பிறகும் முழுப் பூசணி அல்ல பூசணித் தோட்டத்தையே ஒரு கவளம் சோற்றில் மறைக்கப் பார்க்கிறார்.
தொலைக்காட்சி கொடுததால் குடும்பத்திற்கு வருமானம்,
காப்பீட்டுத் திட்டம் என்றால் குடும்பத்திற்கு வருமானம்,
அரிசி வழங்கினால் கடத்தல் மூலம் வருமானம்,
குடும்பத்தில் அனைவருக்கும் பதவி,
அதனால் அமைச்சர் பெருமக்களின் வாரிசுகளுக்கும் வாய்ப்பு,
முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் பிரச்சினை என்றால்
முதலாளிகளுக்கு ஆதரவாக,
ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஆதிக்க சக்திகளுக்கும் மோதல் என்றால்
ஆதிக்க சக்திகளின் பக்கமாகவே
ஆரவார முழக்கங்கள் அரைகுறையாக நின்று போனாலும் அதைப்
பற்றி சிறிதும் கவலை கொள்ளாத
அரசாக மட்டுமே திமுக அரசு இருந்தது. விமர்சனத்தை சகித்துக் கொள்ள இயலாத அரசு, சுய நலமா, மக்கள் நலமா என்றால் சுய நலம் மட்டுமே
மேலோங்கிய ஒரு அரசு.
இவர்கள் மீண்டும் வந்தால் இவர்களின் தவறுகளை மக்கள் அங்கீகரித்ததாகக் கருதி இன்னும் அராஜகமாக ஆட்சி செய்வார்கள்.
http://ramaniecuvellore.blogspot.com/2011/04/blog-post_12.html
இன்னும் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் முகாம்களில்....
அனேகமாக இப்போது யாரும் அகதி முகாமில் இல்லை.
**பெத்த மகளையே ஊர் மேய விட்டு கோடிகள் சம்பாதிச்சது யாரு..??
** தயாநிதிக்கு மந்திரி பதவி குடுக்க 600 கோடி ரூபாய் வாங்கியது யாரு..??
** ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு மந்திரி பதவி வாங்க டெல்லி சென்று சோனியா செருப்பை துடைத்தது யாரு..??
** தினகரன் அழுவலகத்தில் 3 பேரை எரித்து கொன்றது யாரு...??
** சிபிஐ இடமிருந்து மகளையும் மனைவியையும் காப்பாற்ற தன்மானத்தை இழந்து கட்சியை காங்கிரஸிடம் அடகு வைத்தது யாரு..??
** ஊர் ஊராக சென்று நான் சாகப்போகிறவன் என்னை கடைசி முறையாக் முதலமைச்சராக்கி விடுங்கள் என்று முதலைக்கண்ணீர் வடித்து பிச்சை எடுப்பவர் யாரு..??
** சாதனைகளை செய்ததாக தனது சேனல்களில் பீத்திக்கொண்டு விட்டு.. ஓட்டுக்கு பணம் கொடுத்து குறுக்கு வழியில் வெற்றி பெற நினைக்கும் குள்ள நரி யாரு...???
பதிவுலகப் போராளிகளுக்கு ஒரு வேண்டுகோள்.
http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_13.html
திமுக; அதிமுக இவர்கள் எந்த வகையிலும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல! ஆனால் நம் வசம் மாற்று இல்லை. அதனால் இவர்களில் ஒருவரையே தேர்வு செய்யவேண்டிய இக்கட்டான நிலை.
அதில் திமுக ஆட்சியிலிருந்து நாட்டையே கபளீகரம் செய்வது தெளிவாகத் தெரிகிறது. ஒரு மைனோரிட்டி அரசாக இருந்து இவர்கள் தம் நலனுக்காகவும்; தாம் பெற்ற பிள்ளைகளின் நலனுக்காகவும்
அடிக்கும் கொள்ளைக்கு அளவே இல்லை. இந்நிலையில் இவர்கள் வசம் மீண்டும் நாமே சந்தர்ப்பத்தைத்
ஏற்படுத்திக் கொடுத்தால் உலகம் தாங்குமா? அவர்கள் செய்வது எல்லாம் சரி என ஆகிவிடும்.
அத்துடன் ஊழல் செய்தால் 5 வருடத்துக்கு ஒருதடவை கூட தண்டனையில்லை எனும் எண்ணம் உருவாகும்.
அதனால் திமுக வுக்கு அந்தத் தண்டனையைக் கொடுக்க வேண்டும். அதனால் நாட்டிலேயே ஒரளவுக்காவது ஊழல் செய்வோருக்கு அச்சம் சிறிதேனும் வரும்.
அத்துடன் வரும் அதிமுக வென்று வந்து ஊழல் தான் செய்யப்போகிறதென்றாலும்...ஒர் சிறு இடைவெளி
குறைந்தது 2 வருடமாவது கொஞ்சம் ஒழுங்காக இருப்பார்கள்.அந்த இடைவெளிக்குள் மக்கள் மூச்சு விடலாம். அளவுக்கு மிஞ்சினால் மக்கள் தண்டனை உண்டெனும் பயம் இருக்கும்.
ஆனால் அதிமுக வந்தால் கலைஞர் -லுங்கியுடன் தெருவில் இருப்பதை; கொல்லுறாங்க ; குரலுடன்
பார்க்கலாம்.
மற்றும் - அம்மா வந்தால் விகாவை எப்படி படியவைப்பதென அவருக்குத் தெரியும்.
அதனால்- ஊழல் செய்வோர்; செய்ய முயல்வோர் அனைவருக்கும் சிறிதளவு அச்வுணர்வு ஏற்பட வேண்டுமானால் ; கட்டாயம் அதிமுக வுக்கு வாங்குப் போடவேண்டும்.
oru arasangam seyyum satharana velaikal ellam eppati oru arasin sathanai aakum?
avvaru karutha makkalai pazhakkittarkal arasiyalvathikal....
போடா லூச அதான் திமுக மன்ன கவ்விடுச்சே.அண்ணாமலை பல்கலை மாணவன் உதயகுமார் கொலை கீழ்வெண்மணி கொலை தினகரன் மூணு பேரு கொலை இதெல்லாம் நடக்கணும்னா திமுகவுக்கு ஒட்டு போடணுமா?நீ துபாய்ல இருப்ப நாங்க இங்க திமுகவுக்கு ஓட்டுபோட்டு சாகணுமா?ஒன்னோட வூட்ட பரிச்சா ஒனக்கு எப்படிடா இருக்கும்?தயும்ககாராணுவ அதாண்ட பன்னுராணுவ லூசு முண்டம்.மருவாதையை ஓடிடுடா நாயே பண்ணி கருணாநிதிக்கு ***** கழுவுடா
திராவிட மசுறேல்லாம் இப்போ எவனும் நம்புரதிலடா தூமை!!போடா பண்ணி
இனி இங்க ஒன்ன பாத்தேன் கருணாநிதியின் பீயை அள்ளி உன் வாயிலபோடுவேண்டா திராவிட லூசு
The person who wrote this article should be Kalainjar Karunaadhi or Mamtha Banerjee or Azhagiri or Stalin.
If he is non of the above, then i can tell you all that the person who wrote this article is unfit to vote and we all can very well assume that he is uneducated to know what is good and what is bad.
கருத்துரையிடுக