வெள்ளி, 30 ஜூலை, 2010

நியூமராலஜி- விவாதத்திற்கான அழைப்பு

“நான்கு பக்கம் துன்பம் வந்தால் நாத்திகருக்கும் கடவுள் உண்டு
காண்பதெல்லாம் துயரம் என்றால் கடவுளுக்கும் கடவுள் உண்டு”
கண்ணதாசன்

1992- ல் நான் சவூதி வந்து இறங்கிய வரையில் நான் எந்த ராசி என்ன நட்சத்திரம் என்று கூடத் தெரியாது. முழு நாத்திகன்.இங்கு வந்து நான் பட்ட கஷ்டங்கள்..அது எனக்கு ஒரு மோசமான காலம்..1994-ல் அப்பா முடியாமல் மருத்தவமனையில் சேர்த்திருக்க, மருத்துவர்கள் கை விரிக்க., அண்ணன் தகவல் சொன்னதும் . exit-entry visa formalities எல்லாம் முடித்து விமான தளத்திற்குச் சென்றால்.. இந்தியா செல்லும் எல்லா விமானங்களும் ரத்தான செய்தி.. இந்தியவில் பிளேக் நோய் என்று காரணம் காட்டி எல்லா இந்தியாவுக்கும் சவூதிக்குமான எல்லா விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது அன்று முதல். அன்று இரவு வரை விமான தளத்தில் இருந்துவிட்டு, இன்னொருவர் சொன்ன யோசனையின் படி ,காலையில் ஸ்ரீலங்கா விமானம் பிடித்து , கொழும்பு சென்று அதன் பின் சென்னை அல்லது திருச்சி செல்லலாம் என்று வீட்டுக்கு திரும்பி படுத்தவனை, எழுப்பியது “ அப்பா இறந்துவிட்டார்” என்ற தொலைபேசியே.. அப்பத்தான் என் மனைவி ஜாதகம் பாக்கணுங்க என்று சொல்லி , 1994க்குப் பிறகு தான் என் ராசி , நட்சத்திரம் தெரிந்து கொண்டேன். ஆனால் இன்று வரையில் ஜாதகம் மேல் நம்பிக்கை இல்லை.. ஜாதகம் என்பதே நமக்கு சாதகமாகச் சொல்வது என்ற நம்பிக்கையைத் தவிர அதில் வேறு ஒன்றுமில்லை.


ஆனால் பிறந்த தேதிமேல் எனக்கு ஒரு ஆர்வம் சின்ன வயசுலெயே இருந்து இருக்கிறது..ஜூலை 15- காமராஜ், ஆகஸ்ட 15- சுதந்திர தினம் செப் 15-அண்ணா,அக்டோபர் 15- நான் என்ற மிதப்புலேயே வளர்ந்தவன். பின்னாளில் கண்ணதாசன் 24-ந்தேதி பிறந்தவர் என்றும் நான் 15 – ரெண்டுபேருக்கும் பிறந்த எண் கூட்டுத் தொகை 6 – என்றதுடன் நானும் கண்ணதாசன் மாதிரி வாழ்வேன் ,ஒருகையில் மதுவும் ஒரு கையில் மாதுவுடனும் வாழவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.கல்லூரிக் காலங்களில் கவியரங்களில் கலந்து கொண்டதும் இது அதிகமானது.


அதிலிருந்து பிறந்த தேதி மட்டும் நான் கேட்பதுண்டு..


இன்று யதேச்சையாக மண்ணின் மைந்தர் முத்தையாவின் பிறந்த தேதி பார்த்தேன்..ஆகஸ்ட் 1 என்று இருந்தது.பார்த்தவுடன் மனசு குளிர்ந்தது..எனக்கு மிகவும் நெருக்கமானவர் சிவாஜியும் 1 ந்தேதி..2-ந் தேதி பிறந்தவர்கள் தனித்த சிந்தனைக்கு உரியவர்கள் என்ற எண்ணமும் எனக்கு உண்டு.. காந்தி, பாரதி, பாரதி தாசன்.2-ந் தேதி.. 5-ந் தேதி பிறந்த வாஜ்பாயும் டாகடர் ராதாகிருஷ்ணனும், நேருவும் சபலத்திற்கு சொந்தக்காரர்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.. 5 ந் தேதியும் கவிஞர்களுக்கு உரியது. 3 ந் தேதி நினைத்ததை சாதிக்கப் பிறந்தவர்கள் என்ற எண்ணம் உண்டு. கலைஞர், ரஜினி 3-ந் தேதி பிறந்தவர்கள். இந்த பிறந்த எண் விளையாட்டு எனக்கு ரொம்பவும் பிரியத்துக்கு உரியதாக இருந்து வந்து உள்ளது.மூட நம்பிக்கை என்று தெரிந்தும்..


ஆனாலும் என் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் போது , இந்த மாதிரி மூட நம்பிக்கை எல்லாம் தலையிடவிடாமல், திலீபன் என்ற போராளி பெயரும், கல்லூரிக் கால என் புனைபெயரான உதயநிலவன் என்று இரண்டாவது மகனுக்கும் பெயரிட்டேன்.

நண்பர்கள் என்ன நினைக்கிறார்கள் என அறிய ஆவலாக உள்ளது

அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

6 கருத்துகள்:

rooto சொன்னது…

திகதியோட சாதிச்சவங்கள நல்ல சொன்னீங்க!! பட் அதே திகதியில பிறந்து உருப்படாம போனா ஆக்கள் லட்சம் கோடிபேர். ஏதொ உருவர் முயற்சி,சந்தர்ப்பம் சிறு அதிஸ்டமும் கைகுடுக்க அவர்கள் சொந்த உழைப்பிலும்,சிந்தனையிலும் முன்னுக்கு வந்ததை நாள், தேதி,ராசி என்று எமது கண்ணுக்கு புலப்படாதவற்றைவைத்து பீல விடப்புடாது!!

ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்
நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்!!!

A.Neelamegam . சொன்னது…

கரும்பலகையில் நறுக்கெனக் குறித்திருப்பது மிக அழகு.

இன்பமே வாழ்க்கை என்றால் கடவுளை யார் நினைப்பார். துன்பம் வந்தால் தானே கடவுளின் ஞாபகம் வருது. துன்பத்தின் துணைவன் கடவுள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாஸ்து, ஜாதகம், நியூமரலாஜி - இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை வெற்றிவேல் சார். அதனால் கருத்துச் சொல்ல எனக்கு தெரியவில்லை.

அ.வெற்றிவேல் சொன்னது…

வருகை புரிந்ததற்கும் கருத்துக்கள் தந்தமைக்கும் rooto,Neelu &சே.குமார் அவர்களுக்கு நன்றிகள்

வால்பையன் சொன்னது…

//திகதியோட சாதிச்சவங்கள நல்ல சொன்னீங்க!! பட் அதே திகதியில பிறந்து உருப்படாம போனா ஆக்கள் லட்சம் கோடிபேர். //


இதே தான் என் பதிலும்!

அ.வெற்றிவேல் சொன்னது…

வால்பையன்: வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்..
நானும் தங்கள் கருத்துதான்..முன்னேறுவது குறித்துப் பேசவில்லை..கட்டுரை அப்படிச் செய்தி தருமென்றால் அது என் பிழை. சில தேதிகளில் பிறந்தவர்கள் குணநலன்கள் ஒன்றாக இருப்பது தான் இங்கு செய்தியாகவும் விவாதத்திற்குமான ஒன்று என்பதுதான் இக்கட்டுரையின் நோக்கம்

கருத்துரையிடுக