22-நேற்று நடந்த நிகழ்ச்சியில் கூட தன்னை ஒரு எழுத்தாளன் என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் கலைஞர் ஆட்சியில் தான் எழுத்தாளர்களுக்கு போதாத காலம் போலத் தெரிகிறது.
மதுரையில் தினபூமி என்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.. கிரானைட் வியாபாத்தில் ஊழல் நடந்துள்ளதாகச் செய்தி வெளியிட்டதாக..செய்தி வெளியிட்டால் கைதா.?. மான நஷ்ட வழக்குதானே தொடுப்பார்கள்.. சட்டத்தின் வழி ஆட்சி செய்வதாகச் சொல்லும் தி.மு.க அரசு..தான் இந்தக் கொடுமையைச் செய்துள்ளது..
இன்னொரு கொடுமை... பதிவுலகில் பரபரப்பான விஷயங்களை, முக்கியமாக காவல்துறையின் ஊழல்களை, அடாவடிகளை , துறை சார்ந்த அதிகாரிகளின் மூலமே பெறப்பட்டு வெளியிடப்பட்டிருக்குமோ என்று நம்பிக்கையை தோற்றுவிக்கும் தொடர் பதிவுகள் வெளியிட்டுக் கொண்டு இருந்த சவுக்கு வலைத்தளத்தின் ‘சவுக்கு” சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.. கொடுமை என்னவென்றால் கைது செய்யப்பட்ட்து இந்தக் கட்டுரைக்காக அல்ல.. ஏதோ பொய்க்குற்றம் சுமத்தி ஜாமினீல் வெளிவர முடியாத வழக்குகளில் போட்டுள்ளார்கள்.. கஞ்சா கேஸ் புகழ் ஜெயல்லிதா ஆட்சிக்கும் , பொய்க் கேஸ் புகழ் தி.மு.க ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்?
காமராஜர் அன்று சொன்னது.. ”ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்”
ஜெயப்பிரகாஷ் நாராயணன் சொன்னது ..”விநாச காலே விபரீத புத்தி”
பதிவர் சங்கர் கைதுக்கு கண்டனத்தை இங்கு பதிவு செய்கிறேன்..
அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com
9 கருத்துகள்:
தங்களுடைய ஆதரவிற்கு மிக்க நன்றிகள் அண்ணே..!
மிக்க நன்றி சரவணன் அவர்களே
உண்மைதான் இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்..
பதிவர் சவுக்கு அவர்களின் கைதிற்கு எனது கண்டனங்களும்..
உங்களுடைய பதிவுகளை படித்த பின்தான் உங்களை சந்திக்க முடியாமல் போனதன் வலி மெல்ல பரவுகிறது வெற்றி சார்.
இதை போன்ற விசயங்களுக்கு குரல் கொடுக்கவே நெஞ்சில் கொஞ்சம் தைரியம் இருக்க வேண்டும். உங்களிடம் நிறையவே. உங்களுடன் உடன் படுகிறேன்.
மிக்க நன்றி சரவணக்குமார் மற்றும் கமலேஷ்.. தளத்திற்கு வருகை புரிந்ததற்கும் கருத்துக்களை பதிவு செய்ததற்கும்..
@கமலேஷ்: நீங்கள் சின்ன வயது ஆனால் உங்கள் கவிதைகளில் அது தெரியவில்லை.. நாம் பார்க்கலாம்..ஜூபைல் நான் அடிக்கடி வரும் இடம் தான்.
நண்பரே உங்களுக்கும் இந்த கருப்பு தான் பிடிக்குமா? படிக்க படுத்தி எடுக்குதே?
நேதாஜி: என் தளத்திற்கு வந்ததற்கு ந்ன்றிகள்.. வலைதளம் பற்றி எனக்கு அதுவும் தெரியாது. என் மகன் வடிவமைதுக் கொடுத்தது..கேட்டால் இது கருப்பு இல்லை என்கிறான்.அவனுக்கு நேரம் இருந்தால் தான் மாற்ற முடியும் .மாற்றச் சொல்லியுள்ளேன்
உண்மைதான் இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்..
பதிவர் சவுக்கு அவர்களின் கைதிற்கு எனது கண்டனங்களும்..
சுருக்கென அம்பு தைத்தார்போல் எழுதி இருக்கிறீர்கள். நாட்டில் பேச்சுரிமை எழுத்துரிமை எல்லாம் நசுக்கப்பட்டு வருகிறது..
என கடுமையான கண்டனத்தை அரசுக்கு நானும் தெரிவிக்கிறேன்
கருத்துரையிடுக