ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

கேள்விகள் மட்டுமே என்னிடம்.. பதில்கள்...?

( நான் ரொம்ப படிக்காதவங்க.. ஆதித்தனார் காலம் தொட்டு இன்றுவரை,முடிந்த அளவு பாமரனுக்கும் புரியும் வகையில் செய்தி தரும் தினத்தந்திதான் நமக்கு ஆசான்.. இருந்தாலும் பாருங்க.. சில விஷயங்கள் எனக்கு புரியவதில்லை. அப்பப்ப கேள்வி வந்துருங்க.. தெரிஞ்சவங்க யாராவது பதில் சொன்னா நல்லா இருக்கும்..)


கேள்வி #1:
விலைவாசி குறைய நடத்தப்பட்ட அனைத்து முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பொருளாதார மேதை மன்மோகன் சிங், சில்லறை வியாபரத்தில் போட்டி இருந்தால் தான் விலைவாசி குறையும் என்பதால் வெளிநாட்டினர் சில்லறை வியாபாரத்தில் இறக்கிவிட உள்ள கட்டுப்பாடுகளை நீக்கப் போவதாக அறிவித்துள்ளார். அம்பாசிடர் காருக்கு போட்டி என்றால் பரவாயில்லை.. அவரைக்காயையும் அரிசியையும் வெளிநாட்டுக்காரன் வந்து விற்றால் எப்படிங்க விலை குறையும்? எனக்குப் புரியலீங்க..இந்தப் பொருளாதார கணக்கு.. யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க..


கேள்வி #2:
பாதுகாப்பு ஆலோசகராக பதவி எடுத்துக் கொண்டு நிம்மதியா தூங்கிக் கொண்டிருந்த சிவசங்கர் மேனன், இலங்கையில் பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டு தோற்றுப் போன சரத் பொன்சேகா “தமக்கு எதிரான துன்புறுத்தல்களை நிறுத்தாவிடில் உயிரைப் பணயம் வைத்து உண்மையை வெளியிடுவேன் “ என்று அறிவித்த அடுத்த நொடியே மேனன் தமிழகம் வந்து கலைஞரைச் சந்தித்துவிட்டு எதுக்குங்க?.. அப்படி என்ன மலையாளி மேனன் தூக்கத்தை கெடுத்த ரகஸ்யம்? யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க..


கேள்வி #3:
நூற்றுக்கு எண்பது விழுக்காடு பதிவர்கள் திரை உலகம் சம்பந்தமான விஷயத்திற்கு முக்கியம் கொடுப்பார்கள்..ஆனால் இரண்டு தினங்களாக நானும் பார்க்கிறேன்.. மலையாள நடிகன் ஜெயராம் என்ற கோமாளி தமிழக பெண்களை , அதுவும் வீட்டு வேலை பார்க்கும் அடிமட்டத் தொழிலாளியான வீட்டு வேலை பார்ப்பவரை “கருத்த எருமை போன்ற தமிழச்சி” என்று சொல்லியுள்ளான்.. அந்த்ச் செய்தி எந்தப் பதிவர்க்கும் கிடைக்கலயா? சுடச்சுட விமர்சனம் எழுதும் அனைத்து சினிமா ரசிகர்களான பதிவர்கள் ஒரு கண்டனச் செய்தி பதிவிட நேரமில்லாமல் அசல் பட டிக்கெட் கிடைக்காமல் அலைந்து கொண்டு இருக்கிறார்களா? யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க..


கேள்வி#4:
பதிவர்களை விடுங்கள்.. தமிழ்ப் பெண்களின் காசில் கோடிகோடியாக சம்பாதிக்கும் தமிழ்த் திரை உலகின் சூப்பர்,சூப்ரிம், உலகம், தளபதி, கேப்டன் அல்டிமேட் என அலம்பல் பண்ணும் கோமாளிகள் என்ன பண்ணுகிறார்கள்? ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடாமல்? அது சரி தமிழ்த் திரை உலகில் உண்மையான தமிழ் உணர்வுடன் ஒரு தமிழானாவது இருந்தால் தானே? “ஈ”க்கு இரும்புப் பட்டறையில் என்ன வேலை? மானத்திற்கும் இவன்களுக்கும் சம்பந்தம் இருக்குதாங்க.. யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க..


தொடர்புக்கு : vetrivel@nsc-ks.com

2 கருத்துகள்:

அண்ணாமலையான் சொன்னது…

பின்னிட்டீங்க

gulf-tamilan சொன்னது…

ரொம்ப சூடா இருங்கிங்க போல!!!

கருத்துரையிடுக