வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

‘சூப்பர் ஸ்டார்’ பிள்ளையார்- பகுதி 2

‘சூப்பர் ஸ்டார் பிள்ளையார்’ என்ற என் முதல் கட்டுரை தவறாகப் புரிந்து கொள்ளபட்டுள்ளது என நினைக்கிறேன்.தமிழகத்திற்கு பிள்ளையார் வருகை, பிள்ளையாரை நம்பியுள்ள அரசியல் பற்றி எனக்கு நல்ல அறிமுகம் உண்டு. அதைப்பற்றி எழுதினால் அது முழுக்க முழுக்க அரசியல் என்பதும் அது குறித்து இணையத்தில் முன்னரே விவாதிக்கப் பட்டுள்ளது என்பதும் எனக்கு தெரியும். ஆனால் அது அல்ல.., எனது கட்டுரையின் விவாதப் பொருள்.
பிள்ளையார், அய்யப்பன், சிரிக்கும் புத்தர் சிலை, அக்ஷ்ய திரிதியை, கல்கி சாமி முதல் கார்பரேட் சாமி என எல்லாவற்றையும் தமிழர்கள் வாங்கிக் கொள்ளும் மனநிலை குறித்து மட்டுமே எனது கட்டுரை.

மகாராஷ்டிராவில் தொடங்கிய பிள்ளையார் ஊர்வலம் தமிழகத்தில் மட்டும் ஏன் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்..ஒரிசாவிலோ வங்காளத்திலோ பீகாரிலோ இல்லாத பிள்ளையார் ஊர்வலம் என்ற அரசியல் இங்கு மட்டும் வெற்றிகரமான வியாபாரமாக மாறியது ஏன்..அந்த மாநிலங்களில் இந்துக்கள் இல்லையா? அக்ஷ்ய திரியதை என்றால் இந்தியா முழுதும் தானே., தமிழக மக்கள் மட்டும் ஏன் அன்று மட்டும் 1 கோடிக்கு போட்டி போட்டுக்கொண்டு தங்கம் வாங்க வேண்டும்.எவனோ சொன்னால் அது உண்மை என்று நம்பி வீடு தோறும் சிரிக்கும் புத்தர் சிலை வாங்கி வைக்கவேண்டும்.வீட்டின் நடுக்கூடத்தில் வாய் அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி , அதில் மலர்களை போட்டு வைத்து, வீட்டிற்கு அது நல்லது தரும் என்ற நம்பிக்கை ஏன் வந்தது? இது போன்ற கேள்விகள் தான் நான் கேட்க வந்தது..


சிறு வயதில் நான் ஒரு சைவச் சாமியாராகவே இருந்துள்ளேன்.. அப்பொழுது பிரதோஷம் என்றால் என்னவென்றே தெரியாது.எனக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டதெல்லாம், தைப்பூசம்,பங்குனி உத்திரம்,சித்திரைத் திருவிழா, வைகாசி விசாகம்,கந்த சஷ்டி,திருக்கார்த்திகை,மார்கழி திருப்பாவை தானே.. முருகனை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட விழாக்கள் தானே தமிழர்கள் கொண்ட்டாடி வந்த்து? ..பிரதோஷம் எப்படி எங்கிருந்து வந்தது?சிவன் கோயிகளில் பிரதோஷத்தன்று உள்ளே நுழைய முடியாத அளவு கூட்டம்..


புதுப்புது நம்பிக்கைகள்! புதுப்புது கொள்கைகள்! அது குறித்து மட்டுமே எனது ஆதங்கம்.


அன்று முதல் இன்று வரை கர்நாடகா என்றால் நவராத்த்ரியும், கேரளா என்றால் ஓணம் , வங்காளம் என்றால் துர்கா பூஜையும் தத்தமது விழாக்களாக கொண்டாடிவரும் போது தமிழர்கள் மட்டும், தனக்கென ஒரு அடையாளம் வைத்துக் கொள்வதில்லை.தனது அடையாளங்களை தொடர்ந்து தொலைத்துக்கொண்டு இருப்பது ஏன் என்பது தான் எனது முந்தைய கட்டுரையின் அடிநாதமான கேள்வியே..

தமிழனின் பராம்பரிய திருவிழா “தமிழர் திருநாள்” என்றாலும் அதையும் தமிழர்கள் கொண்டாட விரும்புவதில்லை.வட இந்தியப்பண்டிகையான தீபாவளிக்கு கொடுக்கும் முக்கியம் கூட தமிழர் திருநாளுக்கு கொடுக்கப்படுவதில்லை. புதிதாக இப்பொழுது ஹோலிப் பண்டிகை பிரபலமாகிக்கொண்டு உள்ளது.


தமிழர்கள் அனைவரும் ஒன்றுகூடி தமிழர் திருநாள் கொண்டாடலாம் என்றால், அதற்கும் மதச்சாயம் பூசுகிறார் ஒரு இஸ்லாமிய அன்பர் இணையத்தில் எழுதிய ஒரு கட்டுரையில்.. பொங்கல் திருவிழாவில் இந்துக்கூறுகள் அதிகமாக இருப்பதால் , இஸ்லாமியர்கள் கொண்டாடுவதில்லை என.. அனைத்து மலையாளிகளும் முஸ்லீம் மலையாளிகள் உள்பட ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடும் போது, தமிழர்கள் அனைவரும் இணைந்து தமிழர் திருநாளைக் கொண்டாடலாம் தானே..


தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையில் இந்துக்கூறுகள் கலந்து விட்டதாக தாங்கள் கொண்டாடவில்லை என்பதை ஒரு வாதத்திற்காக சரியென்றே வைத்துக்கொண்டாலும், போன ஆண்டிலிருந்து தமிழக அரசு தமிழ்ப்புத்தாண்டாக அற்வித்துள்ளதே அதில் கலந்து கொண்டு தாம் தமிழர்கள் என்று உரிமையுடன் கொண்டாடலாமே.. ஸமஸ்கிருத ஆண்டின் பெயர் இருக்ககூடாது என்றும் எந்த சமய அடையாளங்களும் இருக்க கூடாது என்றுதானே திருவள்ளுவரை முன்னிருத்தி தமிழ்ப்புத்தாண்டாக , தமிழ்ச்சான்றோர்கள் ஒன்று கூடி தை முதல் நாளை தமிழர்களின் புத்தாண்டாக அறிவித்துள்ளார்கள்.. அந்த நாளையாவது தமிழர்கள் ஒன்றுகூட ஒரு நல்ல வாய்ப்பாக பயன் படுத்தலாம் என்பது எனது அந்த இஸ்லாமிய நண்பருக்கு நான் விடுக்கும் ஒரு சிறு வேண்டுகோள்..


தொடர்புக்கு : vetrivel@nsc-ks.com

2 கருத்துகள்:

கோவி.கண்ணன் சொன்னது…

//திருவள்ளுவரை முன்னிருத்தி தமிழ்ப்புத்தாண்டாக , தமிழ்ச்சான்றோர்கள் ஒன்று கூடி தை முதல் நாளை தமிழர்களின் புத்தாண்டாக அறிவித்துள்ளார்கள்.. அந்த நாளையாவது தமிழர்கள் ஒன்றுகூட ஒரு நல்ல வாய்ப்பாக பயன் படுத்தலாம் என்பது எனது அந்த இஸ்லாமிய நண்பருக்கு நான் விடுக்கும் ஒரு சிறு வேண்டுகோள்.//

நல்ல வேண்டுகோள், எல்லோரும் கொண்டாடுவோம் எல்லோரும் கொண்டாடுவோம்.....அல்லாவின் பெயரைச் சொல்லியும் தமிழ் புத்தாண்டு எல்லோரும் கொண்டாடுவோம் !
:)

Thenammai Lakshmanan சொன்னது…

//போன ஆண்டிலிருந்து தமிழக அரசு தமிழ்ப்புத்தாண்டாக அற்வித்துள்ளதே அதில் கலந்து கொண்டு தாம் தமிழர்கள் என்று உரிமையுடன் கொண்டாடலாமே//

இதை நானும் வரவேற்கிறேன் வெற்றிவேல் சார்

கருத்துரையிடுக