மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் அவர்களுக்கு
வணக்கமுடன் வெற்றிவேல்.( தமிழ் நாட்டின் குடிமகன்)
8ந் தேதி சட்டமன்றத்தில் ஒரு கேள்விக்கு விடை அளித்த அமைச்சர் பொன்முடி அவர்கள், இந்த வருட தமிழக கனிம வள நிறுவனத்தின் மொத்த வருவாய் சென்ற வருடம் 10 கோடியாக இருந்தது , இந்த வருடம் 3 கோடியாக குறைந்துவிட்டது என்று புள்ளிவிவரம் கொடுத்து இருந்தார்.
தமிழகத்தின் ஆதி நகரமான மதுரையைச் சுற்றியுள்ள பல்வேறு மலைகளும் வெடிவைத்து தகர்க்கப்பட்டு,மொட்டை அடிக்கப்பட்டது வெறும் 3 கோடி வருமானத்திற்காகவா? வருடம் ஒரு முறை விடுமுறைக்கு வரும் போதெல்லாம் ,மதுரை-காரைக்குடி, மதுரை-சிவகங்கை சாலையில் உள்ள சிறு சிறு குன்றுகள் முதல் பெரிய மலைகள் வரை திடீர் திடீர் என காணாமல் போனது எல்லாம் இந்த 3 கோடி வருவாய்க்காகவா? இந்த 3 கோடி வருவாய் தமிழ் நாடு மொத்ததிற்குமானது. அப்படிப்பார்த்தால், மதுரையைச் சுற்றியுள்ள குவாரிகளால் வரும் வருமானம் அரை கோடி கூட இருக்காது.எதற்காக இயற்கை கொடுத்த மலைகளை நாம் மொட்டை அடித்துக் கொண்டு இருக்கிறோம்? மதுரையைச் சுற்றியுள்ள இந்த மலைக்குன்றுகள் எவ்வளவு வரலாற்றுச் சிறப்பு கொண்டது என்பது தங்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. சமணர்கள் தங்கி இருந்த குகைகள், அவர்கள் படுத்து இருந்த பள்ளிகள் என வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த மலைதொடர்கள் இல்லாமல் ஆக்கப்பட்டது சொற்ப வருமானத்திற்கா? இந்த மலைத்தொடர்கள் இயற்கை தந்த வரம் அல்லவா? 300 கோடி கிடைத்தாலும் வேண்டாமென்று இவற்றைப் பராமரிக்க வேண்டியது நமது கடமை அல்லவா.. இது மட்டுமின்றி சிவகங்கை சாலை, மற்றும் கீழவளவு சாலையோர கிராமத்து மக்கள் இந்த கிரானைட் குவாரியால் உடல்நிலை பாதிப்புக்குள்ளாவது, தங்கள் கவனத்திற்கு வருவதில்லையா?
சுற்றச்சூழல் இதனால் மாசு படுவது,மக்கள் தீராத நோயில் விழ்வது போன்றவற்றில் இருந்து விடுதலை கிடைக்காதா என ஏங்கியுள்ள மக்களுக்கு விடுதலை கிடைக்கும் வண்ணம், இந்தக் குவாரிகளால் வருவாய் அதிகமில்லை என முடிவெடுத்து , இதை மூடிட அம்மக்களின் சார்பாக இந்த வேண்டுகோளை தங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.
இதனை பதிவு அஞ்சலில் தங்கள் பார்வைக்கு அனுப்பி வைக்கிறேன்.
வணக்கத்துடன்
அ.வெற்றிவேல்
09/01/2010
தொடர்புக்கு : vetrivel@nsc-ks.com
3 கருத்துகள்:
தாங்கள் கூறியது உண்மைத்தான் வெற்றிவேல் சார்
காரைக்குடியில் இருந்து மதுரை செல்லும் வழியில் உள்ள மலைகள் எல்லாம் துண்டுபட்டு கிடக்கின்றன
மலைகள் இருந்ததற்கான அடையாளமே கிடையாது
இயற்கையை இவ்வாறெல்லாம் சீரழித்தால் சமச்சீரமைவு குலைந்து சுனாமி பூகம்பம் போன்றவை ஏன் வராது..?
நியாயமான,அக்கறையான பதிவு வெற்றி சார்!
Dear Vetrivel sir,
Very good request to our chief minister. Recently i also saw this. But i feel they will not stop. Because they getting more and more profit from this business. I thik minister mistakenly gave somebody's personal income (Rs. 3 Cr).
regards
Dr.A. Nagavel
கருத்துரையிடுக