2010 மார்ச் என்று நினைக்கிறேன்.. எனக்கு கிரிக்கெட் பற்றி அதிகம் தெரியாததால், எந்த மேட்ச், யாருக்கு எதிராக என்று தெரியாது.. சச்சின் 200 எடுத்த அன்று..
என் அலுவகத்தில் எனக்கு தனி அறை.. என் கீழே வேலை பார்க்கும் அனைவரும் என் கண் பார்வையில் எனக்கு எதிராக திறந்த வெளியில் இருப்பதாக அலுவலக அமைப்பு.. பாகிஸ்தானிகள் அதிகமாகவும், இந்தியர்கள் 3 பேருடனும் இயங்கிக் கொண்டிருந்த போது, ஒரு இந்திய நண்பர் சச்சின் 200 எடுத்ததாகச் சொல்லவே கை கொடுத்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்கள். நான் வெளியில் வந்து விஷயம் கேள்விப்படட உடனேயே நான் சொன்னது..” சினிமாவில் மார்க்கெட் போன நடிகர்கள் அவர்கள் செலவிலேயே படம் எடுத்து , தன் திறமைகளை காண்பித்து வெளியிடுவார்கள்.எம்.ஜி.ஆர் காலத்திலேயே இதுதான் நிலை..நாடோடி மன்னன் படத்தின் போது அவர் சொன்னது போல் வெற்றி பெற்றால் மன்னன் அல்லது நாடோடி.. அதே நிலைதான் சச்சினுக்கு இன்று..அனைத்து விளம்பரங்களிலும் தோனி தான் வருகிறார்..ஆகவே இது ஒரு செட்டப்” என்றும் இதற்காக அலுவல் நேரத்தில் இப்படி பேசிக்கொண்டு இருப்பது எனக்குப் பிடிக்காது என்று எச்சரித்தும் வந்தேன். ஆனால் அதன் பின் வந்த இந்திய முதன்மை லீக் (IPL) ஏலத்தில் சச்சின் கலந்து கொள்ளும் அணி அதிக விலை போகவேண்டும் என்பதறகாக முன் கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் இந்த 200 ரன் என்று தகவல் வந்துள்ளதாகவும் அதே நண்பர்கள் என்னிடம் பின்னால் சொன்னார்கள்..எது உண்மை என்பது பின்னால் யாராவது புத்தகமாகப் போடுவார்கள்..
செப் 8 தினமலரில் , தாங்கள் விளையாடும் அனைத்து போட்டிகளுமே மேட்ச் பிக்ஸிங் தான் என்று பாகிஸ்தானின் துவக்க வீரர் யாசிர் ஹமீதின் பேட்டி வருகிறது..
ஒரு விவாத்திற்காகத் தான் கிரிக்கெட்டை விளையாட்டு என்று அழைக்கிறேனே தவிர, அதற்கும் விளையாட்டு என்பதிற்கும் எள்ளளவும் சம்பநதம் இல்லை..என்னைப் பொறுத்தவரையில் சூதாட்டம் என்பதுதான் சரியான வார்த்தையாக இருக்கும்
என் சிறு வயதில் நான் வளர்ந்தது அக்ரஹாரத்தில் தான்.. சிவகங்கையில் இரண்டு விதமான அக்ரஹாரம் உண்டு.. உயர்தர பிராமணர்கள் இருக்குமிடம் கோலே தெரு..கிரிக்கெட் அங்கு மட்டும் தான் விளையாடுவார்கள்..எங்கள் அக்ரஹாரத்திலோ எப்பொதும் போல் அன்றைய கிட்டி, பம்பரம்,கோலி,பட்டம் மற்றும் கால்பந்து விளையாடுவோம்.பிராமணர்களிலே உயர்தர பிராமணர் விளையாடும் விளையாட்டு கிரிக்கெட் எனப்து என் சிறு வயது பாலபாடம்.
இது ஒரு பிரிட்டிஷ் காலணியாதிக்க விளையாட்டு. அடிமை மன நிலையில் இருந்து விடுபடாத இந்திய சமுதாயம் கிரிக்கெட்டை சுலபமாக தத்து எடுத்துக் கொண்டது. அடிமைக் குடிமக்களாக இருக்க வேண்டும் என்ற பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆசைக்கு உதவியது மெக்காலே கல்வி முறையும், கிரிக்கெட்டும் தான்.உயர் ஜாதி இந்துக்கள் தன்னை ஆங்கிலேயர் போல காட்டிக்கொள்ள விருப்பமுடன் எடுத்துக் கொண்டவை மெக்காலே கல்வி முறையும், கிரிக்கெட்டும்.
கிரிக்கெட் எப்போதும் போல் அன்றிலிருந்து இன்று வரை உயர்ஜாதி விளையாட்டாகவே அறியப்படுகிறது.கால்பந்து,ஹாக்கி,கூடைப்பந்து, வாலிபால் போன்ற விளயாட்டுகளுக்கு தேவையான உடல்வலு,ஒன்றரை மணி நேர தொடர்ந்து விளையாடுவதற்கு தேவையான சக்தி (Stamina) கிரிக்கெட்டிற்கு தேவை இல்லை..ஆகவே ஆரம்பத்தில் இது ..ஏன் இன்று வரை கிரிக்கெட் என்பது பார்ப்பனர்களுக்கும் மேட்டுக்குடி முஸ்லிம்களுக்குமான விளையாட்டாகிப் போனது. இந்தியாவில் உள்ள உடல் உழைப்பற்ற சிறுபான்மையினராக உள்ள உயர்ஜாதியினர் எப்படி பெருமான்மை சமுதாயத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்களோ, அதன் அடிப்படையே கிரிக்கெட்டிலும் ஆதிக்கம் செலுத்துகிறது.
அதுமட்டுமல்ல.. மீடியாவின் துணையோடு தூக்கிநிறுத்தப்பட்ட ஒரு விளையாட்டு..
விடுதலை அடைந்தும் இன்றுவரை தமிழர்கள் நீதிமன்றத்திலும் அரசு அலுவலகங்களிலும் தமிழ் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று போராட்டங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் தமிழர்கள் யாருமே கேட்காமல் மீடியாக்களால் முதன் முதலாகக் கிடைத்த மொழிபெயர்ப்பு எது தெரியுமா? கிரிக்கெட் வர்ணனை ..வானொலி காலங்களிலே , அதைப் பற்றி தெரிந்தவர்கள் 5 விழுக்காடுக்கும் குறைந்து இருந்த போதிலும் கிரிக்கெட்டைப் பரப்ப ஆதிக்க சக்திகள் வர்ணனையை 70களிலேயெ தமிழ்ப்படுத்தி அறிமுகம் செய்தனர்.. இது ஒரு வியாபார உத்தி.. தொலைக் காட்சிகளில் தொகுப்பாளர்கள் என்ன தான் தமிழைக் கொலை செய்தாலும் , விளம்பரம் மட்டும் தமிழில் தான் வரும்..ஏனென்றால் வியாபரம்..காசு.. 90களுக்குப் பிறகு வந்த தொழில் நுட்ப முன்னேற்றத்தால், செயற்கைகோள் உதவியுடன் விடு தோறும் இது திணிக்கப்பட்டது.. தொலைக் காட்சிகளும் கோத்ரா ரயில் எரிப்பை விட அப்பொழுது நடைபெறப் போகும் உலகக் கோப்பை பற்றிதான் அதிகம் கவலைப்பட்டன..அதனால் தான் 7 அல்லது 8 நாடுகளே கலந்து கொள்ளும் ஒரு போட்டிக்கு உலகக் கோப்பை என்று பெயர்..இந்தப் பித்தலாட்டத்தை கேட்கும் நிலையில் யாரும் இல்லை.. ரசிகர்கள் எல்லோரும் ஒரு உன்மத்த நிலையில் இருக்கும் போது என்ன வேண்டுமென்றாலும் சொல்லலாம்..என்பது தான் இதன் அடிப்படைத் தத்துவம்.
விளையாட்டு எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று..அண்மையில் நடந்த கால்பந்திற்கான உலகக் கோப்பையின் எல்லாப் போட்டிகளையும் அனுபவித்துப் பார்த்தவன் . பாரதியாரின் “ஒடி விளையாடு பாப்பா” என்பது என் தாரக மந்திரம் போன்றது.. ஆனால் அது மாலையிலோ, காலையிலோ ஒரு மணி நேரமோ அல்லது இரண்டு மணி நேரமோ வியர்க்க வியர்க்க விளையாடவேண்டும்.. 8X5 நாட்கள் தொடர்ந்து விளையாடி வெற்றி தோல்வி இன்றி முடிந்து நமது காதுகளில் பூக்கள் சுற்றுவது இந்த விளையாட்டு மட்டும் தான்.. இங்கிலாந்தில் வெய்யிலில் நாள் முழுதும் நிற்க கண்டுபிடித்த ஒரு பொழுதுபோக்கை விளையாட்டு என்று நினைத்து நமது தமிழக மக்கள் வெய்யிலில் நிற்பதைப் பார்த்தால் ’நெஞ்சு பொறுக்குதில்லையே” ..டெஸ்ட் போட்டிகளால் நேரம் தான் வீணாகிறது என்று மக்கள் முடிவுக்கு வரும் நிலையில்., கூட்டம் குறைவைதைப் பார்த்து ,ஒரு நாள் போட்டிகள்., அதற்கும் கூட்டம் குறையத் தொடங்கவே 20/20(கூட்டம் என்று நான் குறிப்பது வருமானம்) என்று தமிழ் திரைப்படங்களில் விறுவிறுப்புக்கு எதையாவது சேர்த்து படத்தை ஓட வைக்க விரும்பும் நிலைதான் இங்கும்.. ஏனென்றால் இரண்டுக்கும் வருமானம் தான் முக்கியம்..
Team work என்பது அறவே இல்லாத ஒரு விளையாட்டு..அதனால் தான் இந்தியா தயாரித்த வீரர்களில் கபில்தேவ் , ஸ்ரீகாந்த் தவிர யாருமே இன்றுவரை நாட்டுக்காக விளையாடியதாகத் தெரியவில்லை. எல்லொருமே தனக்காகத் தான் விளையாடுவார்கள்..சமூகத்தில் கால்பந்து போன்ற குழு ஒத்திசைவுடன் இயங்கும் விளயாட்டு ஒதுக்கப்பட்டு, கிரிக்கெட் போன்ற தனிநபர் ஆட்டத்திறனை முன்னிறுத்தும் கிரிக்கெட் வளர்ச்சிக்கும்,கூட்டுக் குடும்ப சிதறல்களுக்கும் தொடர்பு இருக்குமா என்பது சமூக வல்லுநர்களால் ஆராயப்படவேண்டிய ஒன்று..
இத்தனைக்கும் மேலாக, இன்று சூதாட்டம் தான் இதன் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறது.இதை யாருமே மறுக்க முடியாது..
அரசு அதிகாரம், அதில் உள்ள உயர்ஜாதி ஆதிக்கம்,உயர்ஜாதி ஆதிக்கத்தின் பிடியில் இன்று வரை உள்ள மீடியாக்கள் இவை அனைத்தும் சேர்ந்து கிரிக்கெட்டை உச்சத்தில் வைத்துள்ளன..மக்கள் சேவை செய்ய வந்த மத்திய அமைச்சர் கூட, இதில் அதிகம் பணம் புழங்குவதால், அமைச்சர் பதவியை விட்டு விலகி, கிரிக்கெட் அமைப்பிற்கு தலைவராகச் செயல்பட விருப்பமாக உள்ளார்.
இந்தக் கட்டுரைக்கு என் வீட்டிலேயெ எனக்கு பலத்த எதிர்ப்பு இருக்கலாம். என் மகன்களே எதிர்ப்பார்கள்.ஆனாலும் நான் எழுதுவதன் காரணம் இந்தியாவை நான் நேசிக்கிறேன் ..அதாவது இந்தியா என்ற தேசத்தை அல்ல.. இந்திய நாட்டின் மக்களை, வறுமைக்கோட்டிற்கு கீழே இருக்கும் 60 விழுக்காடு மக்களை.. ஆகவே இந்திய முன்னேற்றதிற்கு தடையாக இருக்கும் பல காரணங்களில் மிக முக்கியமான காரணமாக நான் நினைப்பது மதத் தீவிரவாதம், கிரிக்கெட் சூதாட்டத்தின் நேரவிரயம்..
இதன் பிடியிலிருந்து தமிழர்கள் வெளிவரவேண்டும் என்பது தான் என் ஆசை.இன்னும் சில வருடங்களில் இந்தியா திரும்பியவுடன் அங்கங்கு உள்ள நண்பர்கள்,உடல் உழைப்புடன் கூடிய விளையாட்டின் மீது தீராத காதல் கொண்டவர்களை ஒருங்கிணைத்து தமிழர்கள் மனதில் முன் இருக்கையில் இருக்கும் கிரிக்கெட்டை அந்த இடத்தில் இருந்து பின் இருக்கைக்கு நகர்த்தி ஒரு கால்பந்தோ, வாலிபாலோ, ஹாக்கியோ முன் இருக்கையில் குடியேற்றி வைக்க வேண்டும்., அதற்காக ஒரு இயக்கம் தேவைப்பட்டால் கூட ஆரம்பிக்கலாம்..
ஆதரவு வேண்டி நிற்கிறேன்
நன்றியுடன்
அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com
25 கருத்துகள்:
///இதன் பிடியிலிருந்து தமிழர்கள் வெளிவரவேண்டும் என்பது தான் என் ஆசை.இன்னும் சில வருடங்களில் இந்தியா திரும்பியவுடன் அங்கங்கு உள்ள நண்பர்கள்,உடல் உழைப்புடன் கூடிய விளையாட்டின் மீது தீராத காதல் கொண்டவர்களை ஒருங்கிணைத்து தமிழர்கள் மனதில் முன் இருக்கையில் இருக்கும் கிரிக்கெட்டை அந்த இடத்தில் இருந்து பின் இருக்கைக்கு நகர்த்தி ஒரு கால்பந்தோ, வாலிபாலோ, ஹாக்கியோ முன் இருக்கையில் குடியேற்றி வைக்க வேண்டும்., அதற்காக ஒரு இயக்கம் தேவைப்பட்டால் கூட
ஆரம்பிக்கலாம்.. ///
Well said and good initiative. I have been stopped watching Cricket for more than 12 years and switched to Football.
Cricket is not celebrated at the birthplace of that game, England as celebrated in India.
First time I am reading your blog becoz you were star this week, Thanks to Tamilmanam for introducing you to me.
Your writing about Tho. Pa is great. He is a hidden treasure for tamil people. No wonder he was not invited to semmozhi maanadu (Paamaran blog)
How to vote for you in Tamilmanam?
Regards
Renga
திருந்துங்கப்பா.
தான் பெரிய பருப்புன்னு காமிக்கிறதுக்கு அவனவன் எப்படியெல்லாம் எழுத வேண்டியிருக்கு பாருஙக்.
துபாயில பில்டிங் காண்டிராக்டரா நீரு?!
இந்தியா முன்னேறாததற்கு காரணம் எல்லாவற்றிலும் குற்றம் குறை கூறி தான் மட்டும் பெரிய ‘இவன்’ என்று பில்டப் விடும் உம்மைப் போன்ற மொன்னைகள் தான்.
தில் இருந்தால் இந்தியாவில் வந்து உழைத்து சம்பாத்தித்து பிறகு இந்தியா மீது பாசம் உண்டு என்று பில்டப் விடவும்.
cricket sachin is great
என்னுடைய ஆதரவு உண்டு.
மற்ற விளையாட்டுகளுக்கு இல்லாத மதிப்பு கிரிக்கெட்டுக்கு ஏன்?
http://vedivaal.blogspot.com/2007/09/blog-post_28.html
என்னுடைய இந்த பதிவைப் பாருங்களேன்
சகாதேவன்
//ஒரு இந்திய நண்பர் சச்சின் 200 எடுத்ததாகச் சொல்லவே கை கொடுத்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்கள்......ஆகவே இது ஒரு செட்டப்”//
ஒரு மாபெரும் கிரிக்கெட் வீரரை அவமதிக்கும் கருத்து இது. சச்சின் தனது 37 வயதில் 2010 ஆம் ஆண்டு அடித்திருக்கும் சதங்கள் சச்சினின் திறமையை பறைசாற்றும். சச்சினின் சாதனைகளை எந்த கிரிக்கெட் வீரராலும் கிட்டே நெருங்க முடியாது.
*
”அரண்டவன் க்ண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் போல” கிரிக்கெட் விளையாட்டுக்கு சாதி சாயம் பூசுவது தேவையற்றது என்பது என் தாழ்மையான கருத்து.
கிரிக்கெட் விளையாட்டிற்கு கொடுக்கப்படும் அதிக முக்கியத்துவம் வருத்தப்பட வேண்டிய ஒன்று. மற்ற விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், ஊக்குவிக்க வேண்டும்.
தந்தை பெரியாரின் பிறந்த நாளன இன்று பெரியாரைப் பற்றிய கட்டுரையை எதிர்பார்த்தேன்... கிரிக்கெட் அல்ல!
Thambi po pa poi pullkuutigala padikkavai
பெரியார் பற்றி நீங்கள் எழுதி இருக்கலாம் என்பது என் கருத்தும் கூட.. நானும் ஒரு காலத்தில் கிரிகெட் வெறியனாக இருந்த காலம் உண்டு.. இப்பொழுது இல்லை.. ஏனெனில் எனக்கு MADRAS CRICKET CLUB பற்றி எனக்கு மிக நன்றாக தெரியும்.. அதன இண்டு இடுக்கு அத்தனையும் பணம் பணம்.. பணமென்றால் சில லட்சங்கள் அல்ல... கோடிகள் பலப்பல பல நூறு கோடிகள்..கிரிகெட்டை எவ்வளவு அபத்தமாக ரசித்துகொண்டிருக்கிறேன்.. என்று எனக்கு உரைத்த தருணம் அது. இந்தியாவில் வந்து உழைத்து.. வரிகட்டி.. அந்த பணத்தில் நம்மக்கள் மீதும்,குழந்தைகள் மீதும் குண்டுபோடவா..ANONIMOUS ..?
நன்றி!!! Renga,பெயரில்லா சொன்னது, மரை, ரவிச்சந்திரன்,ஜோ,சகாதேவன்,ரவிச்சந்திரன்,ராஜா.. வந்ததற்கும் கருத்து தெரிவித்தமைக்கும்...
@ரவிச்சந்திரன்.. என் மீதுள்ள நம்பிக்கைக்கு நன்றிகள்.. நான் பெரியார் பற்றி எழுதத் தான் எண்ணினேன்..ஆனால் ஒரு வாரத்திற்குள்ளாக்வே அற்புதமாக நீங்கள் எழுதிய இடுகை எண்ணத்தில் இருப்பதாலே தான், பெரியார் வாரத்தை இறை நம்பிக்கை என்ற கட்டுரையுடன் தொடங்கினேன். அது மாதிரிதான் .. முதல் மரியாதை பற்றியும் எழுத எண்ணினேன்..நான் மிகவும் போற்றும் சிவாஜி, இளையராஜா,பாரதிராஜா மூவரும் இணைந்த படம் என்பதால் எழுத எண்ணி இருந்த்தௌ உங்கள் கட்டுரையைப் பார்த்ததும்..வேறு எழுத வேண்டியதாகிவிட்டது..
@ரவிச்சந்திரன்.. பெரியார் பற்றி எழுதிகொண்டு இருந்ததை, இருப்பதை தமிழினியன் வலைத்தளத்தில் என் பார்வையில் பெரியார் என்ற தலைப்பில் எழுத உள்ளேன்..தங்களுக்கும் அனுப்பி வைக்கிறேன்..தங்கள் மேலான் கருத்துகளை தெரிவிக்கவும்
@ரவிச்சந்திரன்.. சச்சின் மாபெரும் கிரிக்கெட் வீரர் என்பதில் மாற்று கருத்து இல்லை.. ரஜினியே பாபா படம் எடுக்கலையா..அது மாதிரிதான்.. நான் சொல்வதில் உண்மை இருக்கிறது என்று என் கிரிக்கெட் ரசிக நண்பர்கள் சொல்கிறார்கள்..IPLல் அநத் அணி அதிக விலை போகவேண்டும் என்பதற்காக அந்த ஸ்பான்ஸர் செய்த காரியம் என்று தினமலரில் அல்ல்து வேறு நாளிதழில் நானும் படித்தேன்..
இரண்டாவது சில சிறந்த ஆய்வாளர்கள் வெளியிட்ட ஆராய்ச்சி கட்டுரைகளின் அடிப்படையில் தான் நானும் சாதி பற்றீ எழுதினேன்.. வேண்டுமென்றால் அதன் லிங்க் கொடுக்கிறேன்..
கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் அதிக முக்கியத்துவம் என்னையும் அதிகப்படியாக react பண்ண வைக்கிறது என்று நினைக்கிறேன்.
//@ரவிச்சந்திரன்.. என் மீதுள்ள நம்பிக்கைக்கு நன்றிகள்.. நான் பெரியார் பற்றி எழுதத் தான் எண்ணினேன்...வேறு எழுத வேண்டியதாகிவிட்டது//
:(((
//@ரவிச்சந்திரன்.. பெரியார் பற்றி எழுதிகொண்டு இருந்ததை, இருப்பதை தமிழினியன் வலைத்தளத்தில் என் பார்வையில் பெரியார் என்ற தலைப்பில் எழுத உள்ளேன்..தங்களுக்கும் அனுப்பி வைக்கிறேன்..தங்கள் மேலான் கருத்துகளை தெரிவிக்கவும்
//
மிக்க நன்றி...
//இரண்டாவது சில சிறந்த ஆய்வாளர்கள் வெளியிட்ட ஆராய்ச்சி கட்டுரைகளின் அடிப்படையில் தான் நானும் சாதி பற்றீ எழுதினேன்.. வேண்டுமென்றால் அதன் லிங்க் கொடுக்கிறேன்.//
vssravi@gmail.com - மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். நன்றி.
வாழ்த்துகள்........
//கோலே தெரு//
கோஹலே ஹால் தெரு..... :)
மற்றபடி கிரிக்கெட் ஒரு கட்டமைக்கப்பட்ட வியாபாரம். இதில் சச்சின் போல புனிதப் பசுக்களின் பிம்பமும் கூட கட்டமைக்கப்பட்டதே.
தி இன்டர்நேஷனல் என்ற படத்தைப்பாருங்கள். அதில் ஒரு வசனம் வரும் " நான் ஒரு வெற்று மனிதன், எனக்கு எந்த அதிகாரமும் இல்லை.... என் பதவி மட்டுமே அதிகாரமானது.... என்னைக் கொன்றாலும் எனக்குப் பதிலாய் யாராவது வருவார்கள்...... இது ஒரு முடிவடையா விளையாட்டு" என்று. அதைப் போன்றதொரு பிம்பமே சச்சின். மற்றொன்று நம் புனித பிம்ப வழிபாடு....... சிகப்பா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் :) என்ற மனநிலையில் இருந்து நாம் வெளியே வரவில்லை என்பதையே சில பின்னூட்டங்கள் காட்டுகின்றன.
உளவியல், பொருளாதார ரீதியில் கிரிகெட்டை ஆராய்ந்து பல கட்டுரைகள் இருக்கின்றன. எந்த ஆய்வாளனும் கிரிகெட்டை ஒரு விளையாட்டாக ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.
நீங்கள் ராஜா ஸ்கூலில் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்....... அங்கே இருந்த ஹாக்கி வீரர்கள் எல்லாம் இன்று என்ன செய்கிறார்கள் என்று தெரியும்தானே? என்னுடன் படித்து மாநில அளவில் விளையாண்ட என் நண்பன் லோட்மேன் -ஆக இருக்கிறான். சச்சினைப் போற்றுபவர்கள் இந்த அபலைகளைப்பற்றி என்ன சொல்வார்கள்?
------ மற்றொரு சிவகங்கைக்காரன்
உயர் ஜாதி இந்துக்கள் தன்னை ஆங்கிலேயர் போல காட்டிக்கொள்ள விருப்பமுடன் எடுத்துக் கொண்டவை மெக்காலே கல்வி முறையும், கிரிக்கெட்டும்.//
அப்படியா வெற்றி..
நன்றி ரவிச்சந்திரன்.. கண்டிப்பாக அனுப்பி வைக்கிறேன் .
நன்றி தேனம்மை வந்ததற்கும் வாழ்த்தியதற்கும்..
ஆம். உண்மை.. ஆரம்பத்தில் முழுக்க முழுக்க உயர்ஜாதி இந்துக்களிடம் மட்டுமே இருந்தது..இது குறித்து பல கட்டுரைகள் வந்துள்ளன..கிரிக்கெட்டில் சாதி ஆதிக்கம் என்று
ரவிச்சந்திரன்,
இந்த இடுகையைப் படியுங்கள்:
http://dystocia.weblogs.us/archives/167/
நன்றி - சொ.சங்கரபாண்டி
kabadi...
மட்டைப்பந்து (உரிமை மக்கள் தொலைக்காட்சி) பற்றிய உங்கள் அவதானங்கள் சரியானவையே. அதில் சாதிய சாயம் பூசப்படுவதாக சொல்வது பற்றி.. நிறைய புத்தகங்கள் ஆய்வுகள் புள்ளிவிபரங்கள் உள்ளன. கூகுலில் தேடினால்கூட நிறைய கிடைக்கும். குறிப்பாக ஆனந்தின் நூல், ராமச்சந்திர குஹா, அசி்ஸ் நந்தி என பல நூட்கள் உள்ளன. ஆனந்தின் சிறிய ஆங்கிலப் புத்தகம் பார்ப்பனர்களின் கிரிக்கெட் ஆதிக்கம் பற்றி விரிவாக புள்ளிவிபரங்களை தருகிறது. (என்னிடம் நூல் உள்ளது. வெற்றி உங்களுக்க வேண்டுமெனில் தருகிறேன்.) ஆக, கிரிகெட்டில் சாதி ஆதிக்கம் இல்லை என்பதே கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என்பதுதான்.
அடுத்து ஆங்கில காலனியக் கட்டுமானத்தில் பார்ப்பனிய துபாஷிகளின் பங்கு முக்கியமானது. அவர்கள்தான் மெக்காலே கல்வியை அடியொற்றி உருவான முதல் அதிகார வர்க்கம். இதற்கு காலனிய அரசின் பல புள்ளிவிபரங்கள் உள்ளன. இதுகுறித்து நானேகூட “எண்ணப்பட்ட உடல்களும் எழுதப்பட்ட கதைகளும்” என்கிற மக்கள்தொகை கணக்கெடுப்பின்வழியாக உருவான சாதியமயமாதல் பற்றி எழுதி உள்ளேன். ஆக, மெக்காலே கல்வி, கிரிக்கெட் என்பது வெற்றி சொல்வதைப்போல பார்பனியம் தன்னை தகவமைத்துக்கொள்வதற்கு கைப்பற்றியவைதான்.
விரிவஞ்சி விடுகிறேன். நன்றி.
//-/சுடலை மாடன்/- சொன்னது…
ரவிச்சந்திரன்,
இந்த இடுகையைப் படியுங்கள்:
http://dystocia.weblogs.us/archives/167/
நன்றி - சொ.சங்கரபாண்டி
//
மிக்க நன்றி...
கருத்துரையிடுக